ஹாட் ஸ்பாட்” (Hot Spot) திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

KJB டாக்கீஸ் – செவன் வாரியர்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக KJ பாலமணி மார்பன்,  சுரேஷ் குமார், கோகுல் பெனாய் தயாரிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையரசன், சாண்டி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ், ஜனனி ஐயர், அம்மு அபிராமி, கெளரி G கிஷன் & சோபியா நடிப்பில் உருவாகியுள்ள படம் “ஹாட் ஸ்பாட்”.

தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவும் தயாரிப்பாளருமான K.J.பாலமணி மார்பனிடம் கதையைச் சொல்கிறார் இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்,   அவருக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததா, அவரது காதலை அந்தத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா? என்பதுதான் படத்தின் கதை.

Married Life,  Golden Rules,  தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக் கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று சமூகத்துக்குக் கருத்து சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

ஆண்கள் பெண்கள் போலவும், பெண்கள் ஆண்கள் போலவும் மாறி நடந்து கொண்டால் எப்படி என்பது கதையில் உள்ள கரு. ஒரு பெண், ஆணுக்குத் தாலி கட்டினால்? ஆண், சமையலறையில் சிறைப்பட்டால்? ஆண், மாமனாரின் ஏச்சுபேச்சுக்கும் ஆளானால்? ஆண், நண்பர்களைப் பார்க்கச் செல்ல மாமனாரின் அனுமதியை எதிர்பார்க்க நேர்ந்தால்? இதுதான் Happy Married Life-இன் கதை. 96 பட ஜோடி (ஆதித்யா பாஸ்கர் – கெளரி G கிஷன்) மீண்டும் ஜோடியாக. ஆதித்யா பாஸ்கரின் அதிர்ச்சியாகும் பாவனைகளும், இசையமைப்பாளர்  இசையும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதமளிக்கிறது. அந்தப் புள்ளியைத் தொட்டு, சமூகம் எத்தகைய மாற்றத்தை நோக்கி நகரவேண்டுமென எடுத்தியம்பியுள்ளார் விக்னேஷ் கார்த்திக்.
சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் Golden Rules-இல் எதிர்கொள்கின்றனர். கே பாலச்சந்தரின் வானமே எல்லை, ரமேஷ் அரவிந்த் நடித்த புதிய தென்றல் போல் அண்ணன் – தங்கை என்று தெரியாமல் இருவரும் காதலிக்க, உண்மை தெரிய வரும் போது இருவரும் எடுக்கும் முடிவு. சின்ன அத்தியாயம் என்றாலும் சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லாமல் பயணிக்கிறது.
தக்காளி சட்னி கதை என்னவென்றால் தான் செய்யும் செயலால் சுபாஷுக்கு வேலை பறிபோகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக ஆண் விபச்சாரியாகி பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறான். காமம் வேறு, காதல் வேறு என வியாக்கியானம் அளிக்கிறார் சுபாஷ். ‘அப்படியா?’ எனக் கேட்டு, அவனின் காதலி ஜனனி ஐயர் எடுக்கும் முடிவே தக்காளி சட்னி அத்தியாயத்தின் கதை. சுபாஷ்க்கு ஏன் வேலை போகிறது, அவரது அம்மாவை ஹோட்டல் அறையில் பார்த்ததால் ஏற்படும் குழப்பம், படத்தின் முடிவு என இப்படமும் ரசிக்க வைக்கிறது.
குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோ மூலம் சிறுவர்கள் வாழ்க்கை எப்படி சீர் அழிகிறது. ஆட்டோ ஓட்டுனர் கலையரசன் – சோபியா ஏழைக் குடும்பத்தை சார்ந்த இவர்கள் குழந்தைகள் கலைத்துறையில் திறமை வாய்ந்தவர்கள். சிறுவயதில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மூலம் பணம் – பிரபலம் இரண்டும் கிடைக்கிறது. நல்ல வசதியாக மாறுகிறார். அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த சிறுமி பாலியல் உறவு மூலம் பலியாகிறாள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிறுவர்களை பெரியவர் போல் நடக்க வைப்பது ஆபத்து என உணரவைக்கிறது.
இப்படி 4 கதைகள் அது இல்லாலமல் கதை சொல்லவந்த இயக்குனருக்கு ஏற்கனவே தயாரிப்பாளரின் பெண்ணுடன் காதல். கதை – திருமண சம்மதம் இரண்டும் ஓகே செய்தாரா?
இயக்குநரின் கதையையும் – காதலைத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா? என்பதை வெள்ளித்திரையில் காண்க.
இயக்குனர் எல்லா கதையையும் முடிவு ரசிகர்களிடம் விட்டு விடுகிறார்.
படத்தில் ஒளிப்பதிவு, பாடல் இசை – பின்னணி இசை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு, கலை இயக்கம் என அனைத்தும் அருமையாக உள்ளது. நிறைய முன்னணி நடிகர்கள் இப்படத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள். அனைவரும் மிக பிரபலமான நடிகர்கள் தங்களின் நடிப்பின் மூலம் படத்திற்க்கு உயிருட்டியுள்ளனர்.
“ஹாட் ஸ்பாட்” திரைப்படம் நல்ல தரமான பொழுதுபோக்கு படம். ரசிகர்களை ஈர்க்கும். தரமான வெற்றி படம் என்பதில் சிறிது கூட சந்தேகமில்லை.
#hotspotmoviereview #hotspotmovie #hotspotreview #hotspot
"Mathioli" RAJAA
மதிஒளி ராஜா

You May Also Like

More From Author