“இடி மின்னல் காதல்” திரைப்பட விமர்சனம் – மதி ஒளி ராஜா

 

பவகி என்டர்டெயின்மென்ட் சார்பாக ஜெயசந்தர் பின்னம்னெனி – பாலாஜி மாதவன் தயாரிப்பில், பாலாஜி மாதவன் எழுத்து – இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் சிபி, பாவ்யா ட்ரிக்கா, மாஸ்டர். ஜெய ஆதித்யா, யாஸ்மின் பொன்னப்பா, ராதாரவி, பாலாஜி சக்திவேல், ஜெகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “இடி மின்னல் காதல்”.

இன்னும் சில நாட்களில், அமெரிக்கா செல்லவிருக்கும் நாயகன் சிபி தன் காதலி பாவ்யா ட்ரிக்காவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அசந்தர்ப்பமாக ஒருவர் மீது காரை ஏற்றி விடுகிறார். அதில் அந்த மனிதர் அந்த இடத்திலேயே இறந்து போக இருவரும் பதற்றம் அடைகிறார்கள்.

இன்னொரு பக்கம் சிறுவன் ஜெய ஆதித்யா இரவில் வெளியே சென்ற தன் தந்தையைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கிறார். விபத்தில் இறந்து போன மனிதர் தான் அந்த சிறுவனின் தந்தை என்பது சிபி – பாவ்யா ட்ரிக்காவுக்கு தெரிய வருகிறது. தான் செய்த பாவத்தின் பிராயச்சித்தமாக அந்த சிறுவனை நல்லபடி வளர்க்க நினைக்கிறார்கள்.

கடனுக்காக இறந்து போய்விட்டார் என்று தெரியாமல் சுற்றும் கடன் கொடுத்த ரௌடி கும்பல்.  தன் தந்தையை கொன்றது சிபி தான் என்று தெரிந்ததும் அந்த சிறுவன் வெளிப்படுத்தும் நடிப்பு, அதே போல் இவனது தந்தை இந்த ஊரை விட்டே போகலாம் என்று சொல்லும்போது வெளிப்படுத்தும் நடிப்பு இந்த சாந்த குணம் கொண்ட முகத்தில் இப்படி ஒரு சாத்தானா என்று ஆச்சார்யப் படவைக்கிறது.

சிபி தமிழ் திரையுலகிற்கு நல்ல நாயகன் கிடைத்துள்ளார். பாவ்யா ட்ரிக்காவுக்கு குடும்ப பாங்கான முகம். இளைஞர்கள் மனதை கொள்ளை கொள்ளும் அழகு. நடிப்பும் சிறப்பு. சிறுவன் மீது காட்டும் பாசம் மிக நேர்த்தி.

ராதாரவி, பாலாஜி சக்திவேல் நடிப்பில் மிகவும் தங்களது அனுபவத்தை பிரதிபலித்துதுள்ளனர். இருவருக்கும் மிகவும் சாந்தமான அதே சமயம் அழுத்தமான வேடம் சிறப்பாக செய்துள்ளனர். நாயகனின் தோழனாக வரும் ஜெகன் தனது வேடத்தில் பலம் சேர்த்திருக்கிறார். யாஸ்மின் பொன்னப்பா நடிப்பு, கவர்ச்சி மிக சிறப்பு.

வில்லன் வின்சென்ட் நகுல் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பயமுறுத்தியுள்ளார். சேட்டாகப் பிறந்தும் வாழ்க்கை செட்டாகாத வேடத்தில் சரியாகப் பொருந்துகிறார் மனோஜ் முல்லத்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பாடல்கள் – பின்னணி இசை அபாரம். ஜெயசந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு நேர்த்தி.  ஆண்டனி படத்தொகுப்பு படத்திற்க்கு கூடுதல் பலம். பாலசுப்ரணியன் கலை இயக்கம் படத்திற்க்கு பெரிதும் உதவியுள்ளது.

இயக்குனர் பாலாஜி மாதவன் தன் பணிகளை மிகச் சிறப்பாக செய்துள்ளார். இளைஞர்களை கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

“இடி மின்னல் காதல்” அனைவரையும் நிச்சயம் ரசிக்க வைக்கிறது. காதல், இளமை, கவர்ச்சி, குடும்பம், சென்டிமென்ட் என்று அனைத்து அம்சங்கள் இப்படத்தில் சேர்க்கிறது.

“இடி மின்னல் காதல்” பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கிறது.

IDI MINNAL KADHAL – Cast & Crew Details

Cast:

Ciby
Bhavya Trikha
Yasmin Ponnappa
Radha Ravi
Balaji Shaktivel
Jagan
Master. Jayadithya
Vincent Nakul
Manoj Mullath

Crew:

Written & Direction by: Balaji Madhavan

Music: Sam CS

Original Background Score Sam CS

Dop: Jayachander Pinnamneni

Executive Producer: JK

Editor: Anthony

Art Director: T. Balasubramanian

Singers: Kapil Kapilan, Malavika Sundar, Priyanka, Sam CS

Lyrics: Kabilan

Action Director: Stunner Sam

PRO’s: Diamond Babu – Sathish Kumar

Sound Design: Siddarth Dubey

Production house : Pavaki Entertainment

Producers: Jayachander Pinnamneni, Balaji Madhavan

#idiminnalkadhalmoviereview #idiminnalkadhalmovie #idiminnalkadhalreview #idiminnalkadhal

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author