ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி, ஜோதி, யுவினா பர்தவி, சாந்தினி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள், சுரேந்தர் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஆன்டணி பாக்யராஜ் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் பாடல் இசையில், சாம் C.S. பின்னணி இசையில் உருவாகியுள்ள படம் “சைரன்”.
கொலை பழியை சுமந்துகொண்டு சிறையில் இருக்கும் ஜெயம் ரவி 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை கைதியாக பரோலில் வெளியே வருகிறார். தனது தந்தை ஒரு கொலையாளி என நினைத்துக்கொண்டு இருக்கும் ஜெயம் ரவியின் மகள் மலர் அவரை வெறுத்து ஒதுக்கி வர, மகளிடம் தனது பாசத்தை வெளிப்படுத்த முடியாமல் ஏங்கி தவிக்கிறார் ஜெயம் ரவி.
இவருடைய கதை ஒரு புறம் நகர, காவல் துறை அதிகாரியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது கட்டுப்பாட்டில் இருந்த கைதியை அடித்து கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறார்.
செய்யாத கொலைக்காக சிறையில் தண்டனை அனுபவித்து பரோலில் வெளியே வந்திருக்கும் ஜெயம் ரவியும், போலிஸ் கீர்த்தி சுரேஷும் புதிதாக ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட, நடக்கும் கொலைகளுக்காக பழி சுமத்த படுகிறார்கள். கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி மீது சந்தேகப் படுகிறார். சமுத்திரக்கனி குழு கீர்த்தி சுரேஷ் மீது சந்தேகப் படுகிறார்கள்.
காதல் மனைவி அனுபமா பரமேஸ்வரன் கொலை, அந்த கொலைப்பழி சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற ஜெயம் ரவி. மகள் மீது அதீத பாசம் கொள்கிறார். ஆனால், தன் தந்தை ஒரு கொலைகாரன் என்பதால் தன் தந்தை ஜெயம் ரவியை வெறுக்கும் மகள்.
ஜெயம் ரவி – கீர்த்தி சுரேஷ் சவால் விடும் காட்சிகள் மிகவும் அருமையாக இருந்தது. அனுபமா பரமேஸ்வரன் – ஜெயம் ரவி காதல் காட்சிகள் மனதை கொள்ளை கொள்ளும். அப்பா – மகள் பாசம் அஜித்தின் விஸ்வாசம் 2.O போன்று மக்கள் மனதை கவரும்.
ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருடைய நடிப்பும் மிக சிறப்பு. இளம் தோற்றத்திலும், நடுத்தர வயதானவராகவும் ஜெயம் ரவி நடிப்பில் மிரட்டுகிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போகிறார் கீர்த்தி சுரேஷ். திமிராகவும், கம்பீரமாகவும் பட்டையை கிளப்பியுள்ளார்.
யோகி பாபுவின் நகைச்சுவை அனைத்து காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. வில்லனாக , காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி மிரட்டி இருக்கிறார். மகளாக வரும் யுவினா பர்தவி, ஜெயம் ரவி அம்மாவாக ஜோதி, தங்கையாக சாந்தினி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள், சுரேந்தர் ஆகியோர் நடிப்பு சிறப்பு.
ஜி.வி. பிரகாஷ் பாடல்கள் மனதை ஈர்க்கிறது. சாம் சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு உதவுகிறது. ஒளிப்பதிவு படத்திற்கு பலம், எடிட்டிங் அருமை. ‘ஜாதி இல்லனு சொல்றவன் என்ன ஜாதினு தேடுறத முதல நிப்பாட்டுங்க’ போன்ற வசனங்கள் கவனத்தை ஈர்க்கிறது.
இயக்குனர் அன்டணி பாக்யராஜ் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் ஜெயித்துள்ளார்.
“சைரன்” திரைப்படம் ஜெயம் ரவியின் மகுடத்தில் ஒரு வைரக்கல்.
#sirenmoviereview #sirenmovie #sirenreview #siren #siren108 #சைரன் #moviereview #movie #review #fdfs #boxoffice #audience #theatre
மதிஒளி ராஜா