“கரா” என்கிற தமிழ்த் திரைப்படம் இந்திய அளவில் பிரமாண்டமாக நீர் விலங்கு முதலையை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாக வெளிவர இருக்கிறது

“கரா” என்கிற தமிழ்த் திரைப்படம் இந்திய அளவில் பிரமாண்டமாக நீர் விலங்கு முதலையை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாக வெளிவர இருக்கிறது.

இந்தப் படத்திற்காக மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி “காதல் குமாரு வைரல் ஆனாரு” என்கிற பாடலை பாடியிருக்கிறார். அச்சு ராஜாமணி இசையில் பாடல் வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

வரும் 2024 கோடை விடுமுறையில் படம் வெளியாகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு படமாக இது இருக்கும்.

இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, அறிமுக நாயகி சாகிபா பாஸின் கதாநாயகியாக நடிக்க ஜீவா வில்லனாக நடித்திருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன், சேலம் வேங்கை கே. அய்யனார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

பவானி என்டர்டெயின்மென்ட் சார்பில் ராஜேஷ்குமார் தயாரித்திருக்கிறார். வில்லியம்ஸ் ஒளி பதிவு செய்ய கிரீசன் A. C. A பட தொகுப்பில் அறிமுக இயக்குனர் அவதார் கதை எழுதி இயக்கி இருக்கிறார்.

சினிமா ரசிகர்களுக்கு கோடை விடுமுறையை உற்சாகமாக்க வருகிறது “கரா”. முதலையின் தூய தமிழ் பெயர் “கரா” என்பது கூடுதல் தகவல்.

You May Also Like

More From Author