“கட்டில்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

மாபிள் லீப் புரொடக்ஷன் சார்பாக EV கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் “கட்டில்”.

நம் நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம், பழமையின் பெருமை சொல்லும் கதை.

பல தலைமுறையாக வாழ்ந்த வீடு, 250 ஆண்டுகளாக பயன்படுத்திய கட்டில். இன்றும் அதன் அருமை பெருமை அறிந்த தாயும் – மகனும் – பேரனும். அதன் பெருமை தெரியாத மற்ற பிள்ளைகள் அதை விற்க நினைக்க இத்திரைப்படம் இதயத்திற்கு நெருக்கமாக நம்மை கூட்டி செல்கிறது.

மூன்று தலைமுறைகள் அந்த கட்டில் மேல் வைத்த பற்று பற்றி அவர்கள் வழித் தோன்றுதலான வித்தார்த் கதை சொல்லல் மூலம் காட்சி ஆரம்பிக்கிறது. மூன்று தலைமுறைகள் EV கணேஷ்பாபு அவர்களே நடித்தது படத்திற்கு கனகச்சிதமாக அமைந்துள்ளது.

கை விட்டு போன பாரம்பரிய கட்டில் மீண்டும் வந்ததா? இல்லை வெளிமாநிலம் சென்றதா? ஏக்கம் – பாசம் – தவிப்பு எல்லாம் வீண் போனதா? வெள்ளி திரையில் காண்க.

நாயகன் EV கணேஷ்பாபு தயாரிப்பாளர் – இயக்குனர் என தொழில்நுட்ப முறையில் மட்டுமின்றி நாயகனாக 3 வேடங்கள் (தாத்தா – மகன் – பேரன்) 5 வித தோற்றங்கள் என மிக முக்கியமான விஷயம் எடுத்துக்கொண்டு சிறப்பாக செய்துள்ளார்.

நாயகி ஸ்ருஷ்டி டாங்கே கர்ப்பிணி பெண்ணாக, ஒரு குழந்தைக்கு அம்மாவாக அற்புதமாக நடித்துள்ளார். நாயகனின் அம்மாவாக வரும் கீதா கைலாசம் நடிப்பு சிறப்பு. சிறுவன் நிதிஷ் நடிப்பு பாராட்டுக்குரியது.

எழுத்தாளர் இந்திரா சௌந்தர் ராஜன், நடிகர்கள் சம்பத் ராம், நடிகைகள் செம்மலர் அன்னம், மெட்டி ஒலி சாந்தி நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது.

ஒளிப்பதிவு ஒயிட் ஆங்கில் ரவி சங்கரன் அற்புதமான வேலை 4 தலைமுறைக்கான வித்தியாசத்தை நம் கண் முன்னே காட்டியுள்ளார். கலை இயக்கம் P கிருஷ்ணமூர்த்தி – மனோ இருவருக்கும் சவாலான பணி மிகவும் அருமையாக செய்துள்ளனர்.

இசை ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார். இதுவரை பார்க்காத பின்னணி இசை மனதை விட்டு நீங்காது நம்முடனே வலம் வரும் மற்றும் பாடல்கள் விருதுகள் பல காத்திருக்கு. பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து – மதன் கார்க்கி படத்தை தன் பாடல் வரிகள் மூலம் வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது.

கதை – படத்தொகுப்பு B. லெனின் படத்திற்கு பலம்.

தனி மனித இராணுவம் போல் EV கணேஷ்பாபு இந்த படத்தை உருவாக்கியதில் திரையுலகில் நீங்கா இடம் பிடிப்பார்.

தரமான படம் விரும்பும் திரைப்பட ரசிகர்களுக்கு சிறப்பான படம் “கட்டில்”.

இது போன்ற படங்களின் வெற்றியே நமது திரைப்படங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும்.

குடும்பம் முழுவதும் சேர்ந்து பார்க்க கூடிய படைப்பு இந்த “கட்டில்” படம்.

பார்த்தவர்கள் பாராட்டும் படம் “கட்டில்”.

Artists

Hero – E.V.Ganesh Babu
Heroine – Srushti Dange

Vidharth (Guest appearance)
Kannika snekan
Master Nidhish
Geetha Kailasam
Indra Soundar Rajan
Sampathram
Semmalar Annam
Artist shyam
Metti oli Shanthi
Kadhal Kandhas

Technicians

Producer & Director : EV Ganesh Babu
Dop : Wide angle Ravishankaran
Music : Srikanth Deva
Singer : Sid Sriram
Script & Editing : B.Lenin
Lyrics : Kaviperarasu Vairamuthu
Art : P.Krishnamurthy, Mano
Choreographer : Metti Oli Shanthi
Production Executive : Rajan, Ela.Vasudevan
Pro : Sathish (AIM)

#kattilmoviereview #kattilmovie #kattilreview #kattil #movie #review #moviereview #fdfs #fdfsreview #audience #audiencereview #theatre #theatrereview #boxoffice

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author