“லாந்தர்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

M சினிமாஸ் புரொடக்ஷன் சார்பாக பத்ரி – ஶ்ரீ விஷ்ணு தயாரிப்பில், சஜி சலீம் இயக்கத்தில், “மைனா” புகழ் விதார்த், சஹானா, விபின், ஸ்வேதா டோரத்தி,  பசுபதி ராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “லாந்தர்.”

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இப்படத்தின் கதை செல்கிறது. காவல்துறை ஏ சி பி அரவிந்தாக நாயகன் விதார்த் வருகிறார். இவர் ஆரம்பத்திலேயே கள்ளச்சாராயம் தயாரிக்கும் கும்பலை கைது செய்கிறார். இப்படி இருக்கும்போது அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் சாலையில் செல்பவர்களை கொடூரமாக தாக்கிக் கொண்டிருக்கிறார். இவரைப் பிடிக்க செல்லும் போலீஸ் அதிகாரிகளையும் அந்த மர்ம நபர் தாக்குகிறார்.

நாயகி ஸ்வேதா டோரத்திக்கு  இருட்டு மற்றும் அதிக சத்தம் கேட்டால் சட்டென்று பயந்து மயக்கமடைந்து விடுவார் அவருடைய பயத்தை போக்க வேண்டும் என்பதற்காக கோயம்புத்தூர் புறநகர் பகுதியில் வீடு ஒன்றை எடுத்து வாழ்ந்து வருகிறார்கள்.

இன்னொருபுறம், விபின் – சஹானா புதுமண காதல் ஜோடி. விபின் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஒருநாள் வேலைக்கு சென்றிருக்கும் சமயம் சஹானா பார்வைக்கு ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் தென்படுகிறது. அதனுடன் சம்பந்தப்பட்ட டாக்டர் கஜராஜிடம் விளக்கம் கேட்கிறார், அதிர்ச்சியாகிறார் சஹானா.

மர்ம நபர் விஷயம் அறிவும் விதார்த், அந்த மர்ம நபரை பிடிக்க தானே நேரடியாக களத்தில் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் விதார்த் மனைவியை அந்த மர்ம நபர் கடத்தி செல்கிறார்.

ஒருபக்கம் கண்ணில் படுபவர் அனைவரையும் கொலைவெறியுடன் தாக்கும் மர்மநபர், மர்ம நபரை தேடும் இரவு ரோந்து பணி காவல்துறை, தானே களத்தில் இறங்கும் நாயகன் விதார்த், பயந்த சுபாவம் கொண்ட நாயகி, மர்மம் என்ன என்ற கேள்வியாக விபின் – சஹானா ஜோடி இப்படி கதை பல கோணங்களில் நகர்கிறது.

படம் தொடங்கியதும் மிக வேகமாகi நகர்கிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக நகர்கிறது திரைக்கதை. அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு படம் பார்க்கும்போது ஏற்படுகிறது.

நடித்த அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக சஹானா நடிப்பு சூப்பர். இசை பாடல்கள் சிறப்பு – பின்னணி இசை மிகச்சிறப்பாக. ஒளிப்பதிவு – படத்தொகுப்பு படத்தின் முதுகெலும்பு.

கதைக்களம், திரைக்கதை ரசிகர்களை சீட் முனையில் கட்டிப்போடுகிறது. விறுவிறுப்பு பஞ்சமில்லை. அளவான வசனம் படத்தின் ஜீவன். சலிப்பில்லாமல் படத்தை கொடுத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுகள்.

LAANDHAR MOVIE

CAST :-

VIDAARTH – ACP ARAVINDH

SWETHA DORATHY – JANU ak JANAKI

VIBIN – NAGUL

SAHANA – MANJU

PASUPATHI RAJ – CHITHAMBARAM

GAJARAJ – DR.MATHEWS

MEENA PUSHPARAJ – NEELAVENI

MADHAN ARJUNAN – MUTHU

 

TECHNICIANS :-

WRITTER & DIRECTOR- SAJISALEEM

EDITOR – BARATH VIKRAMAN

DOP – GNANA SOWMDHAR

MUSIC – M.S. PRRAVEEN

STUNT – VICKY

ART DIRECTOR – KALLAI DEVA G

COSTUMES – MUTHUVEL

DI&VFX – KNACK STUDIOS

FILM MIX – UDHAY KUMAR (KNACK STUDIOS)

SOUND DESIGN – A. SATHIS KUMAR

BANNER- M CINEMA PRODUCTION

PRODUCED BY – SHRI VISHNU

PRO – NIKIL MURUKAN

EXECUTIVE PRODUCER – BASKAR G

PRODUCTION CONTROLLER – AR CHANDRA MOHAN

PRODUCTION MANAGER – KARTHI

PUBLICITY DESIGNER – VIJAY

#laandharmoviereview #laandharmovie #laandhar #lasndharreview #laandhartamilmoviereview #tamilmoviereview #movie #review #moviereview #laandharmovieupdates #movietrailer #laandharmovietrailer #fdfs #firstdayfirstshow #theatre #audience #audiencereview #theatrereview #audienceopinion #theatreresponse #audienceresponse #boxoffice #collection

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author