“மறக்குமா நெஞ்சம்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ஃபிலியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் – குவியம் மீடியாஒர்க்ஸ் சார்பாக ரகு எள்ளுரு – ரமேஷ் பஞ்சகுனுலா – ஜனார்தன் சௌத்ரி – ராகோ. யோகன்றன் தயாரிப்பில், ராகோ. யோகன்றன் எழுத்து – இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “மறக்குமா நெஞ்சம்”.

2008 காலத்தில் பள்ளி பயிலும் ரக்ஷன், தீனா, ராகுல் 11வது படிக்கும் மாணவர்கள். நகைச்சுவை – கலாட்டா என்று போகும் வாழ்க்கையில் ரக்ஷன்க்கு மலினா மீது காதல் ஏற்படுகிறது.

அவளிடம் காதல் சொல்ல தயக்கம். பள்ளி ஆண்டு விழாவில், மலினாவிடம் தன் காதலை சொல்லி விட முடிவு செய்து இருக்கிறார் ரக்ஷன். ஆனால் ஆண்டு விழா நடக்காமல் போய் விடுகிறது.

பள்ளி படிப்பு முடிந்து 10 ஆண்டுகள் ஆகிவிடுகிறது. இவர்கள் பள்ளி மீது பொறாமை கொண்ட மற்றொரு பள்ளி இவர்களது தேர்வு முறைகேடு என்று வழக்கு தொடர, நீதிமன்ற தீர்ப்பு அந்த மாணவர்கள் மீண்டும் அதே தேர்வு எழுத வேண்டும் என்று தீர்ப்பு அளிக்க 10 ஆண்டுகள் பிறகு, பழைய மாணவர்கள் மீண்டும் அதே பள்ளியில் ஒன்று இணைகிறார்கள்.

ஒரு கான்வென்ட் பள்ளியின் 2008 பேட்ச்சில் இருந்து 2018 இல் தங்கள் பள்ளிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் மற்றும் 3 மாதங்கள் பலகைத் தேர்வுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு.

சொல்லாமல் விட்ட காதல் மறுபடியும் மலினாவிடம் சொன்னாரா ரக்ஷன்? மலினா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாரா? மற்ற நண்பர்கள் வாழ்க்கை? மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை திரையில் காண்க.

மாணவ மாணவியர் சேட்டை – பள்ளி கால காதல் – இளமை வயது நினைவுகள் – 2008 & 2018 கால வித்தியாசம் என சிறப்பாக வழங்கியுள்ளார் இயக்குனர். கதை – திரைக்கதை – வசனம் & இயக்கம் அருமை.

விஜய்டிவி பிரபல தொகுப்பாளர் VJ ரக்ஷன் கதையின் நாயகன் பள்ளி மாணவனாகவும் துள்ளல் – நடனம் – நகைச்சுவை – காதல் வலி என்றும் 10 வருடம் பின் காதல் ஏக்கம், தொழிலதிபர் என்ற அனுபவ அறிவு என்று சிறப்பாக செய்து இருக்கிறார். நாயகி மலினா அழகு தேவதை,  இளமை துள்ளல் காதல் வயப்பட்ட வைக்கும் வசீகரம் தமிழ் திரையுலகிற்கு நல்ல வரவு.

தீனா – ராகுல் நகைச்சுவை அற்புதம். முணிஷ் காந்த் – அகிலா அருமையான நடிப்பு. மற்ற அனைத்து கதாப்பாத்திரங்களும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இளமை துள்ளல் இசையில் பாடல்கள் – பின்னணி இசையை இசையமைப்பாளர் சச்சின் வாரியர் வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் : கோபி துரைசாமி அவர்களது கைவண்ணத்தில் அணைத்து காட்சிகளும் நம் கண்களை வசியப்படுத்துகிறது.

இப்படம் பார்க்கும் அனைவரையும் அவர்களது பள்ளிப் பருவத்திற்கு அழைத்து செல்கிறது. விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்த 96 படத்தின் 2.O போன்று ரக்ஷ்ன் – மலினா ஜோடி அருமை அதே போல் காதலுக்கு உதவும் நண்பர்கள் என்று கதைக்களம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. பன்னீர் புஷ்பங்கள் போன்ற பள்ளி கால பருவ காதலை சொல்லி இருக்கிறது.

இத்திரைப்படம் நகைச்சுவை, காதல் மற்றும் ஏக்கம் நிறைந்த சாரத்தின் மயக்கும் கலவையை உறுதி செய்கிறது.

விஜய்டிவி பிரபல தொகுப்பாளர் VJ ரக்ஷ்ன், மலினா, அருண் குரியன், KPY தீனா , முனிஷ்காந்த், ஸ்வேதா வேணுகோபால், பிராங்க் ஸ்டார் ராகுல், ஆஷிகா காதர், நட்டாலி லார்ட்ஸ், விஷ்வாத், அகிலா மற்றும் பலர் உள்ளனர்.

இசையமைப்பாளர்: சச்சின் வாரியர் ஒளிப்பதிவாளர் : கோபி துரைசாமி

படத்தொகுப்பு : பாலமுரளி கலை வடிவமைப்பாளர்: பிரேம் கருந்தமலை

“மறக்குமா நெஞ்சம்”  இளைஞர்கள் கொண்டாடும் படம் என்பதில் சிறிது கூட சந்தேகம் இல்லை. நல்ல தரமான பொழுதுபோக்கு உறுதி.

Marakkuma Nenjam Cast & Crew list

Cast :-

Rakshan As Karthik

Malina As Priyadharshini

Dheena As Salim

Rahul As Gautham

Swetha Venugopal As Saranya

Muthazhagan As Raghav

Melvin Dennies As Joseph

Munishkanth As Karthikeyan (PT Sir)

Arun Kurian As Arjun

Akila As Jennifer(Maths Miss)

Ashika Kader as lintosha

Natalie Lourds As Shilpha

Vishvath as yogi

Crew :-

Writter & Director – Raako.Yoagandran

Cinematographer- Gopi Duraisamy

Music – Sachin Warrier

Editors – Balamurali,Shashank Mali

Art Director – Prem Karunthamalai

Lyrics – Thamarai

Costume Designer – Ramya Sekar

Additional Screenplay – Akshay Poolla

Additional Dialogue – Prasanth S, Dheena

Sound Designers – Sukumar Nallagonda, Shrikanth Sundar (The Soundaholics)

Sound Mix – Jaison Jose (Four Frames)

Colorist – Veeraragavan

Costumes – Naresh

Makeup – Ravi

PRO – Sathish Kumar

Publicity Design – Heeds Ad Tech Solutions

Designers – Prithivi Raj, Suman, Murugavel, Sri Hari Sankar,

Dubbing Studio – Granta Sound Company

Dubbing Engineer – Kashyap Rammohan, Santom Jose

Stills – Pugazh

VFX – Monolith Technologies Pvt Ltd, Tinge of Hues Post Factory, Chennai

Production Executive – Selva Shanmugam

Creative Producer – Sriram Ananthashankar

Executive Producer – Anirudh Vallabh

Production Companies – Filia Entertainment Pvt Ltd. & Kuviyam Mediaworks

Producers – Raghu Yelluru – Ramesh Panchagnula – Janardhan Chowdary – Raako.Yoagandran

#marakkumanenjammoviereview #marakkumanenjammovie #marakkumanenjamreview #marakkumanenjam #movie #review #moviereview #fdfs #audience #theatre #boxoffice

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

 

 

 

You May Also Like

More From Author