தர்மராஜ் பிலிம்ஸ் சார்பாக நவீன் ஷர்மா – லோகேஷ் குமார் தயாரிப்பில், லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “N4”.
வட சென்னை வாழ் மக்கள் கதை, கடல் சென்று மீன்களை பிடித்து வரும் மீனவர்களிடம் மீன்களை லோட் இறக்கும் மற்றும் சில்லறை வணிகம் செய்யும் குடும்பத்தினர் கதை.
லோட் இறக்கும் கூலியில் தகராறு ஏற்பட்டு சண்டை. மூன்று இளம் ஜோடிகளின் காதல். வட சென்னை மக்களின் வாழ்வியல், நேர்மையான காவல்துறை பெண் அதிகாரி அவர் நினைத்தால் பல லட்சங்கள் சம்பாதிக்கலாம், ஆனால் அவர் அப்படி செய்யாமல் இருப்பது மற்ற காவல்துறையினருக்கு பிரச்சனை, தன் மகன் உயிர் வாழ பணம் தேவை என்ற நிலை, என முதல் பகுதி கதை நகர, அந்த ஜோடிகளில் ஒரு இளம் பெண் மீது துப்பாக்கி சூடு ஏற்படுகிறது.
முன் விரோதம் காரணமா? நேர்மையான காவல்துறை அதிகாரி நிலை? உயிருக்கு போராடும் பெண் நிலை? யார் துப்பாக்கியால் சுட்டனர்? என பல கேள்விகளுக்கு விடை இரண்டாம் பகுதி.
மைக்கேல் தங்கதுரை நடிப்பு இயற்கை மிக சிறப்பு. பெண் காவல்துறை அதிகாரி அனுபமா குமார் நடிப்பு அபாரம். வடிவுக்கரசி அனுபவ நடிப்p ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மற்ற அனைத்து நடிகர்களும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். மைக்கேல் தங்கதுரை இன்னொரு சியான் விக்ரமாக வர வாய்ப்புள்ளது
இரண்டு கானா பாடல்கள், ஒரு மெலோடி காதல் பாடலில் இசையமைப்பாளர் வாழ்ந்துள்ளார். பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு அருமை.
வட சென்னை வசனம், இயக்கம் இயக்குனரின் ஆளுமை தெரிகிறது.
“N4” இளைஞர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
Cast
Micheal Thangadurai as *Surya*
Gabriella Sellus as *Soundharya*
Vinusha Devi as *Abinaya*
Anupama Kumar as *Fathima*
Afsal Hameed as *Karthi*
Akshay Kamal as *Vijay*
Pragya Nagra as *Swathi*
Vadivukkarasi as *Kannamaa*
Abhishek Shankar as *Rajarathinam*
Azhagu as *Velu*
Crew:
Director – Lokesh Kumar
Cinematographer – Divyank
Editor – Dani Charles
Music director – Balasubramanian G
Sound design – Gokul Dev
Sound mixing – Naveen Shankar
Producers – Naveen Sharma,
Lokesh Kumar
Production Company – Dharmraj Films
#N4MovieReview #n4moviereview #N4Movie #N4review #N4 #n4 #moviereview
மதிஒளி ராஜா