“நாடு” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

சக்ரா & ராஜ் தயாரிப்பில், பிக் பாஸ் தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி, ஆர் எஸ் சிவாஜி, அருள் தாஸ், நடித்து, எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் M. சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நாடு.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் உள்ள மருத்துவ மனையில் பணிபுரிய மருத்துவர்கள் தயங்குகிறார்கள். இதனால், சிகிச்சை இன்றி மலைவாழ் மக்கள் இறந்து போகிறார்கள்.

 

அரசால் அனுப்பபடும் இளம் பெண் (மஹிமா நம்பியார்) மருத்துவரை தக்க வைக்க ஊர் மக்கள் செய்யும் முயற்சிதான் இந்த நாடு. இப்படத்தில் மனித உணர்ச்சிகளின் வழியே சிறிது சமூக பாணியில் படம் தந்துள்ளார். சிறப்பாக குக்கிராமத்தில் மருத்துவ வசதியின் தேவையை புரிய வைத்து விட்டார்.

நீட் அரசியல், மாறி வரும் உணவு பழக்கம் போன்ற விஷயங்களை தொட்டு விட்டு செல்கிறது நாடு. பிக் பாஸ் தர்ஷனுக்கு இது கண்டிப்பாக பெயர் சொல்லும் படமாக இருக்கும். ஒரு சோகம் கலந்த நடிப்பில் நம்மை ‘அட ‘சொல்ல வைக்கிறார். டாக்டராக நடிக்கும் மஹிமா முதலில் ஊர் மக்களை வெறுப்பதும், பின்பு புரிந்து கொண்டு நேசிப்பதும் என மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.

மறைந்த ஆர் எஸ் சிவாஜி இரட்டை வேடம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் நடிப்பு. சிங்கம்புலி & அவரது மகன் கதாப்பாத்திரம் நகைச்சுவை மற்றும் படத்திற்கு பலம்.

மலைவாழ் கிராமம் இயங்க நல்ல மருத்துவமனைகள் தேவை என்பதை வலியுறுத்துகிறது இப்படம். புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு முதல் பெண் மருத்துவர் முத்து லட்சுமியின் பெயரை சூட்டும் போது நம்மை அறியாமல் கை தட்டுகிறோம்.

நல்ல செய்தியுடன் கூடிய பொழுதுபோக்குக்கு பஞ்சம் இல்லாத படம். உணர்ச்சிகளின் உச்சக்கட்ட வெளிப்பாடு ” நாடு”

Naadu Movie Details & Stills for Review

 

Artists

 

Tharshan,

Mahima Nambiar,

R. S Sivaji,

Singam puli,

Arul doss,

Inba Ravikumar,

Vasantha

 

Technicians

 

Director : M. Saravanan

Music : C. Sathya

Dop : K. A. Sakthivel

Art. : Lalgudi. N. Ilaiya raja

Editor: PK

#naadumoviereview #naadumovie #naadureview #naadu #moviereview #movie #review #fdfs

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author