ஏகே ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பெருமாள் வரதன் இயக்கத்தில், சுரேஷ் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் “நந்திவர்மன்”.
1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், செஞ்சி பகுதியில் கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது.
அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவி, தொல்லியல் துறை அதிகாரி போஸ் வெங்கட் தலைமையில் மாணவர் குழு ஒன்றை ஆய்வு மேற்கொள்ள அங்கு அனுப்புகிறார்.
ஆனால், அந்த கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்வதை தவிர்ப்பதோடு, அந்த இடத்தில் ஆய்வு நடத்தவும் தடையாக நிற்கிறார்கள்.
மக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் போஸ் வெங்கட் குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்படுவதோடு, ஆய்வு குழுவில் இருந்த மாணவர் ஒருவரும் கொல்லப்படுகிறார்.
இந்த கொலைகள் பற்றிய விசாரணையை கையில் எடுக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாயகன் சுரேஷ் ரவி, அந்த ஊரில் நடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
அவருக்கு ஆய்வு குழுவைச் சேர்ந்த நாயகி ஆஷா வெங்கடேஷ் உதவி செய்ய, அந்த மர்மத்தின் பின்னணி என்ன?, உண்மையிலேயே அந்த ஊரில் நந்திவர்மன் கட்டிய கோவிலும், புதையலும் புதைந்திருக்கிறதா? என்பதை சொல்வது தான் ‘நந்திவர்மன்’ படத்தின் மீதிக்கதை.
நந்திவர்மன் படம் திரில்லர் – அமானுஷ்யம் – வரலாற்று பதிவு – ஆராய்ச்சி என ஆரம்பம் முதல் நன்றாக கொண்டு செல்கிறது.
நாயகன் சுரேஷ் ரவி காவல்துறை அதிகாரி, அவரது உடல்வாகும், உடல் மொழியும் அவரது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளது. நடிப்பும் சிறப்பு.
நாயகி ஆஷா வெங்கட் நல்ல அழகு, நடிப்பும் ரசிக்கும் படி உள்ளது. போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, மீசை ராஜேந்திரன் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஆடுகளம் முருகதாஸ், கோதண்டம், கஜராஜ் நன்றாக நடித்துள்ளனர். தொல்லியல் ஆய்வு செய்யும் நடிகர்கள் மற்றும் அனுமந்தபுரம் மக்கள் படத்திற்கு பலமாக இருந்திருக்கின்றனர்.
சேயோன் முத்து ஒளிப்பதிவு மிக அருமை, சான் லோகேஷ் படத்தொகுப்பு சிறப்பு. கலை இயக்கம் முனிகிருஷ்ணன் & கம்ப்யுட்டர் கிராபிக்ஸ் பணி மிக சிறப்பு. ஜெரால்ட் ஃபெலிக்ஸ் இசையில் பாடல் & பின்னணி இசை ரசிக்கும் படி உள்ளது.
கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் நன்றாக இருக்கிறது. படத்திற்கு தேவையான அளவு செலவு செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது அதற்காக தயாரிப்பாளரை பாராட்டலாம்.
‘நந்திவர்மன்’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும்.
“Nandhivarman”
Actors:-
Suresh Ravi – Guru Varman
Asha Venkatesh – Elakkiya
Bose Venkat – Bose Venkatachalam
Nizhalgal Ravi – Chakravarththi
Gajaraj – Dharmaraj
Meesai Rajendar – Pazhanivel Raayan
Aadukalam Murugadoss – JCB Mani
Ambani Shankar – Trouser
Kothandam – Kothandam
JSK Gopi – SV Pasupathi
Technicians:-
Production company name: AK Film Factory
Producer: Arunkumar Dhanasekaran
Director: G.V. Perumal Varadhan
Editor: San Lokesh
Music Director : Jerard Felix
DOP: R. V. Seyon Muthu ( சேயோன் முத்து )
Stunt: Sudesh
Art Director: Munikrishnan
Lyricists : Madhan Karky, ku.karthik
Costume Designer: Sivakarthik
Make Up: Raguraman
Choreography: Srikrish
Computer Graphics: Hocus Pocus, EL visual effects & BusyBees Animation studios
DI: Bishma Studio
Sound Design & Mixing : Hari Prasad MA
Designs: Fox eye
Stills: Rajendran
PRO : Suresh sugu / DharmaDurai / Sathish ( AIM )
Production Manager : Ramesh & Hari venkat
Executive Producer : R. Balakumar
#nandhivarmanmoviereview #nandhivarmanmovie # nandhivarmanreview #nandhivarman #fdfs #audience #theatre #movie #review #moviereview #boxoffice
மதிஒளி ராஜா