“நினைவெல்லாம் நீயடா” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

லேகா தியேட்டர்ஸ் சார்பாக ராயல் பாபு தயாரிப்பில், ஆதிராஜன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”.

பிரஜின் தன் பள்ளிப்பருவ காதலி யுவலக்ஷ்மி மீது பல ஆண்டுகள் ஆகியும் அதே காதலோடு இருக்கிறார். தனக்காக காதலுடன் காத்திருப்பாள் என அவள் நினைவுடன் வாழ்கிறார். அவள் பிரிவை தாங்க முடியாமல் குடிப்பழக்கம் அவருக்கு வருகிறது.

பிரஜினை தீவிரமாக காதலிக்கிறார் முறைப்பெண் மனிஷா யாதவ். பிரஜின் தன் (ரெடின் கிங்ஸ்லி) நண்பர்களுடன் சேர்ந்து தன் காதலி வீட்டுக்கு அடிக்கடி சென்று எப்போது வெளிநாடு சென்ற தன் காதலி வருவாள் என வீட்டு காவலாளி முத்துராமனிடம் கேட்க அவர் வழக்கம் போல் இந்தியா வரமாட்டார் என அனுப்பி வைக்கிறார்.

தன் காதலியும் தன்னை விரும்புவாரா? அல்லது தன் காதலை ஏற்கமாட்டாரா? எங்கே இருக்கிறார்? வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாரா?  என எதுவும் தெரியாமல் தவிக்கிறார் பிரஜின்.

அடிக்கடி தன் பள்ளிக்கால பிரஜின் (ரோஹித்) காதலை அசைப் போட்டுக் கொண்டு வாழ்கிறார். தன் முறைப்பெண் மனிஷா யாதவ் தற்கொலை முயற்சி செய்ய வலுக்கட்டாயமாக பிரஜினுடன் திருமணம் நடக்கிறது. தன் காதலி திருமணம் செய்து கொள்ளாமல் தன் மீது காதல் இருந்தால் தன் உயிரை மாய்த்து கொள்ளவதாக முடிவு எடுக்கிறார்.

மனிஷா யாதவ் மீது விருப்பம் இல்லாத பிரஜின் வெறுப்பதால் மனநிலை பாதிக்கப்பட்டு மனிஷா யாதவ் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார். இந்நிலையில், வெளிநாடு சென்ற யுவலக்ஷ்மி வாலிப வயது (சினாமிகா) பிரஜின் மீது காதலுடன், திருமணம் செய்து கொள்ளாமல் இந்தியா வருகிறார்.

இனி நடப்பது என்ன வெள்ளித்திரையில் காண்க.

ரோஹித் – யுவலக்ஷ்மி பள்ளிப்பருவ காதல் இளம் தென்றலாய் ரசிகர்கள் நெஞ்சத்தை வருடி செல்கிறது. இளைய ராஜா இசை கூடுதல் பலம். பிரஜின் – சினாமிகா அனுபவ நடிப்பு சிறப்பு.

நண்பர்களாய் வரும் பள்ளி கால அபி நட்சத்திரா, கோதண்டம் வில்லன் யாசர் அறுமையான நடிப்பை வழங்கியுள்ளனர். மனோபாலா நகைச்சுவை நன்றாக வேலை செய்துள்ளது. ரெடின் கிங்ஸ்லி – மதுமிதா நகைச்சுவை மிக சிறப்பு. வீட்டு காவலாளி முத்துராமன் நடிப்பு அழுத்தம் வாய்ந்தது.

ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி. பாடல் இசையும், பின்னணி இசையும் இசைஞானி இளையராஜா படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறார்.  ஆதிராஜன் இயக்கம் மிக அருமை. நல்ல தரமான படத்தை பார்த்த திருப்தி வழங்கும் படம்.

காதல், இளமை, ரொமான்ஸ், காதல் வலி என இப்படம் ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்துள்ளது.

நல்ல நடிகர்கள் – நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் மூலம் உருவாக்கப் பட்டுள்ளது மிகவும் தரமாக இருக்கிறது “நினைவெல்லாம் நீயடா” .

NINAIVELLAM NEEYADA Tamil Movie (U/A)

Starring – PRAJAN, MANISHA YADAV, SINAMIKAA, YUVALAKSHMI, ROHIT, REDDIN KINGSLEY, MANOBALA, MADHUMITHA, RV UDHAYAKUMAR, PL THENAPPAN, MUTHURAMAN, YASAR, ABI NATCHATHIRA

Written & Directed by: AADHIRAAJAN

Music : ILAIYARAAJA

Producer : ROYAL BABU

Banner : LEKHA THEATRES

Cinematographer : RAJA BHATTACHARJEE

Editor : ASHISH

Art director: Munikrishna

STUNT MASTER: PRADEEP DINESH

LYRICS: ILAIYARAAJA, PAZHANI BHARATHI, SNEKAN

SINGERS: YUVANSHANKAR RAJA

KARTHIK ANANYA BHAT

SIREESHA BHAGAVATHULLA

HARIPRIYA

CHOREOGRAPHY: DINESH , DHEENA

Costume : PRADEEP

PRO : A. JHON

VFX : BAYWOOD STUDIO

CG Head : VIJAYBABA

Sound desinger : RAMJI SOMA

Colorist : Raghuraman

Recording Mixing & Mastering: ILAIYARAAJA STUDIOS, T NAGAR , CHENNAI- 600 017.

#ninaivellamneeyadamoviereview #ninaivellamneeyadamovie #ninaivellamneeyadareview #ninaivellamneeyada #moviereview

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author