“ஒரு நொடி” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

மதுரை அழகர் மூவிஸ் & ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் : அழகர்.ஜி & ஒளிப்பதிவாளர் கே.ஜி. ரத்தீஷ் தயாரிப்பில், பி. மணிவர்மன் எழுத்து & இயக்கத்தில், தமன் குமார், எம். எஸ். பாஸ்கர், வேல. ராமமூர்த்தி, பழ. கருப்பையா, கஜராஜ், கருப்பு நம்பியார், அழகர் ஜி,  விக்னேஷ் ஆதித்யா, அருண் கார்த்திக், ஸ்ரீ ரஞ்சனி, தீபா சங்கர், நிகிதா நடிப்பில் உருவாகியுள்ள படம் “ஒரு நொடி”.

காவல் நிலையத்திற்கு வரும் பெண் (ஸ்ரீ ரஞ்சனி) தனது கணவரை (எம். எஸ். பாஸ்கர்) காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கும் போது, அந்த பெண், தனக்கு ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர் தான் தன் கணவரை கடத்தி இருப்பார் என்றும் சொல்கிறார்.

இதையடுத்து. போலீசார் கரிமேடு தியாகு (வேல. ராமமூர்த்தி) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து பருதி இளமாறன் (தமன் குமார்) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக விசாரணை நடத்தி வருகிறார.

இப்படியாக, ஒரு பக்கம் விசாரனை சென்று கொண்டு இருக்க, மற்றொரு பக்கம் ஒரு இளம் பெண் பார்வதி  (நிகிதா) மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். பின் அவருடைய கொலைக்கு காரணம் என்ன என்பதை கதையின் நாயகன் பருதி இளமாறன் விசாரித்து வருகிறார்.

இப்படி இரண்டு வழக்குக்குமான விடையைத் தேடி ஓட ஆரம்பிக்கார். அதன்பின், பருதி இளமாறன். கடைசியில் காணாமல் போன நபர் கிடைத்தாரா? இளம் பெண்ணை கொன்றது யார்? காணாமல் போன நபரின் நிலை? என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

காணாமல் போன நபரின் கதைக்கும், இறந்து போன இளம்பெண்ணின் கதைக்கும் போடும் முடிச்சு அந்த டுவிஸ்ட் மிக சிறப்பு, எதிர்பார்க்காதது.

இரண்டு குற்றங்களின் விசாரணையை முன்வைத்து இறுதிவரை யார் குற்றவாளி என்னும் மர்மத்தைத் தக்கவைத்து இறுதி கட்டத்தில் மர்மத்தை விலக்கும் பாணியிலான கதையைக் அற்புதமான முறையில், சுவாரஸியமாகக் கொடுத்திருக்கிறார்  இயக்குநர் பி.மணிவர்மன்.

நடித்த அனைவரும் மிக சிறப்பாக தங்களது அனுபவத்தை கொன்டு நடித்துள்ளனர். நாயகன் தமன் குமார் முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்து வருகிறார். காவல்துறை அதிகாரியாக அவரது உடல்மொழி அற்புதம், அவரது குரல், வசன உச்சரிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

ஸ்ரீ ரஞ்சனி அவர்களின் நடிப்பு இந்த படத்தில் வேறு ஒரு தளத்தில் அமைந்திருக்கிறது புதிய பரிமாணத்தில் அசத்தி இருக்கிறார்.

சஞ்சய் மாணிக்கம் இசையில் பாடல்கள், பின்னணி இசை சிறப்பு. கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு மிக அருமை. எஸ். குரு சூர்யா படத்தொகுப்பு திரைக்கதைக்கு கூடுதல் பலம். அனைவரும் படத்திற்க்கு கொடுத்துள்ள பங்களிப்பு படத்தை பார்ப்பவர்களுக்கு முழு திருப்தி கொடுத்துள்ளது.

வசனம் மிக அருமை, திரைக்கதை தொய்வில்லாமல் இயக்கிய இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.

“ஒரு நொடி” படம் நல்ல த்ரில்லர் சினிமா பார்த்த அனுபவத்தை தருகிறது.

 

நடிகர்கள் :-

தமன் குமார் @ பருதி இளமாறன்

வேல. ராமமூர்த்தி @ கரிமேடு தியாகு

எம். எஸ். பாஸ்கர் @ சேகரன்

ஸ்ரீ ரஞ்சனி @ சகுந்தலா

பழ. கருப்பையா @ திரு ஞான மூர்த்தி (MLA)

தீபா சங்கர் @ பொன்னாத்தா

நிகிதா @ பார்வதி

அருண் கார்த்திக் @ ஜீவா

விக்னேஷ் ஆதித்யா @ விநாயகம்

கஜராஜ் @ யோக லிங்கம்

கருப்பு நம்பியார் @ மாணிக்கம்

 

தொழில்நுட்ப கலைஞர்கள் :-

எழுத்து & இயக்கம் : பி. மணிவர்மன்

ஒளிப்பதிவு : கே. ஜி. ரத்தீஷ்

படத்தொகுப்பு : எஸ். குரு சூர்யா

இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம்

கலை இயக்குனர் : எஸ்.ஜே. ராம்

பாடலாசிரியர்கள் : சிவசங்கர் / ஜெகன் கவிராஜ் / உதயா அன்பழகன்

சண்டை பயிற்சி : மிராக்கள் மைக்கில்

தயாரிப்பு நிறுவனம் : மதுரை அழகர் மூவிஸ் & ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் : அழகர்.ஜி & ஒளிப்பதிவாளர் கே.ஜி. ரத்தீஷ்

வெளியிடுபவர் : ஜி. தனஞ்ஜெயன் (கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்நெர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்)

மக்கள் தொடர்பு : P. ஸ்ரீ வெங்கடேஷ்

#orunodimoviereview #orunodimovie #orunodireview #orunodi #moviereview #movie #review

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

 

 

 

 

 

 

 

 

 

You May Also Like

More From Author