T சீரிஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா சார்பாக T சீரிஸ், பிஜோய் நம்பியார், பிரபு ஆன்டணமது அலெக்சாண்டர் தயாரிப்பில், பிஜோய் நம்பியார் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராஜ், டிஜே பானு, மெர்வின் ரொசாரியோ ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “போர்”
இந்த காலத்து கல்லூரி மாணவர்களுக்குள் இடையே நடக்கும் சீனியர் – ஜூனியர் பிரச்னையை படமாக எடுத்திருக்கிறார். நிச்சயமாக இப்படம் அந்த பிரச்னையை மட்டும் சார்ந்து இருக்கிறது என சொல்ல முடியாது.
அர்ஜூன் தாஸ் (பிரபு) – காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவருக்குள் இடையே, சிறுவயதில் ஏற்படும் கசப்பான சம்பவத்தால் தற்போது (கல்லூரி காலத்தில்) மீண்டும் களேபரம் உண்டாவது படத்தின் கதையாக இருந்தாலும், இவர்களை சுற்றி பல கதாபாத்திரங்களும், அவர்களுக்கான பின்னணி கதைகளும் ஒரே கோட்டில் நகர்கிறது.
அர்ஜுன் தாஸ்-ஐ பழிவாங்க அவருக்கு தெரிந்த பெண்களை காளிதாஸ் ஜெயராம் நெருங்கி பழகி பகடை காயாக பயன்படுத்துகிறார்.
அர்ஜுன் தாஸின் ஜோடியாக டி.ஜே பானு (காயத்ரி) கல்லூரியில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேக்கும் போராளி பெண்ணாக வருகிறார். அக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் சாதி பெயரை வைத்து மாணவர் ஒருவரை இழிவுபடுத்துவதை தட்டி கேட்கிறார். இவருடன் இருக்கும் நித்யஸ்ரீ(வெண்ணிலா) என்பவர், கல்லூரி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.
இதில் சத்யா என்பவரும் (அரசியல் கட்சித்தலைவர், கல்லூரி அறங்காவலரின் மகள்) அரசியல் எதிர்காலத்தை நினைத்து வாழ்ந்து வருவதால் கல்லூரி பொதுச்செயலாளர் பதவிக்கும் ஆசைப்படுகிறார். வெண்ணிலா – சத்யா ஆகிய இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருக்கின்றனர்.
முன்னாள் காதலர்களான இவர்களுக்கு பதவியால் மோதல் ஏற்படுகிறது. இதில் சாதி அரசியலும் நடக்கின்றது. இதனால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே படத்தின் மீதிக் கதை.
நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என பெண்களை ஈர்க்கும் நாயகர்கள். அதேபோல் ஆண்களை மயக்க நிறைய அழகு தேவதைகள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு, பாடல் இசை – பின்னணி இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம் பணிகள் சர்வதேச திரைப்பட நிகர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சபாஷ் போடலாம்.
இளைஞர்களுக்கான ஆக்சன், டான்ஸ், கல்லூரி வாழ்க்கை, இளமை துள்ளல், கவர்ச்சி, கொண்டாட்டம் என “போர்” படம் அதகளம் செய்துள்ளது.
POR Cast & Crew Details
Cast:
Arjundas
Kalidas Jayaram
T.J.Banu
Sanchana Natarajan
Amrutha Srinivasan
Mervyn Rozario
Crew:
Written & Direction by: Bejoy Nambiar
Music: Sanjith Hegde ,Dhruv Visvanath, Gaurav Godkhindi
Original Background Score Modern Tape Scores (Harish Venkat & Sachidanand Sankaranarayanan), Gaurav Godkhindi
Dop: Jimshi Khalid & Presley Oscar D’souza
Executive Producer: Lakshay Kumar
Editor: Priyank Prem Kumar
Art Director: ManiMozhiyan Ramadurai
Singers: Sanjith Hegde,V.M. Mahalingam,Varsha S Krishnan, Kapil Kapilan
Lyrics: Krithika Nelson, Vignesh Srikanth, Mohan Rajan
Action Director: Riyaz And Habib
Creative Producer: Balakumaran
PRO: Sathish Kumar
Sound Design: Dawn Vincent
Production house : T series, Getaway pictures, Roox media
Producer: T-Series, Bejoy Nambiar, Prabhu Antony, Madhu Alexander
#pormoviereview #pormovie #porreview #por #fdfs #tamilmoviereview #movie #review #moviereview #theatre #audience #boxoffice #film #flick #cinema
மதிஒளி ராஜா