டிஸ்கவரி சினிமாஸ் சார்பாக M. வேடியப்பன் தயாரிப்பில், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், மண்வாசம் வீசும் படம் “ரயில்”.
மதுரை அருகில் உள்ள தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நாயகன் குங்குமராஜ் வீடுகளில் எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறான், மது போதைக்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் எந்த நேரமும் தன் நண்பனுடன் சேர்ந்து மது குடிப்பதிலேயே காலத்தை கழித்து கொண்டிருக்கிறார்.
இதனால், குங்குமராஜுக்கும், அவரது மனைவி வைரமாலாவுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் குங்குமராஜை மதிப்பதில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் குங்குமராஜ் தன் கோபத்தை, தன் வீட்டின் எதிரே குடியிருக்கும் வட மாநில வாலிபர் பர்வேஸ் மெஹ்ரூ மீது காட்டுகிறார். ஆனால், அவரது மனைவி வைரமாலா, வட மாநில வாலிபரை தனது சொந்த தம்பியாக நினைத்து பழகுகிறார்.
தனது சொந்த ஊருக்கு போகும் சூழலில், பர்வேஸ் வைரமாலாவிடம் ஒரு பையை கொடுக்கிறார். அதை திரும்ப வாங்குவதற்குள் அவர் திடீரென்று விபத்தில் மரணமடைய, அவரது இறுதி சடங்கிற்காக அவரது மனைவி, குழந்தை, தந்தை ஆகியோர் தேனி வருகிறார்கள்.
இறுதிச் சடங்கு முடிந்த பிறகு பர்வேஸ் வைத்திருந்த பணம் பற்றி அவரது குடும்பத்தார் கேட்கிறார்கள். அப்போது தான் வைரமாலாவுக்கு பர்வேஸ் தன்னிடம் கொடுத்த பை நினைவுக்கு வருகிறது.
அதை அவர் எடுக்க செல்லும் போது அந்த பை அங்கு இல்லாததால் அதிர்ச்சியடைகிறார். அந்த பை என்ன ஆனது?, பர்வேஸ் குடும்பத்திற்காக வைரமாலா என்ன செய்தார்? என்பதை வெள்ளி திரையில் காண்க.
நாயகனாக நடித்திருக்கும் குங்குமராஜ், நாயகியாக நடித்திருக்கும் வைரமாலா இருவரும் மண் சார்ந்த மனிதர்களாக மனதில் நிற்கிறார்கள். குங்குமராஜுக்கு முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு மூலம் தங்களது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். வைரமாலா குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகவும் அசத்தியவர் இப்படத்தில் நாயகியாக தன் அனுபவ நடிப்பில் சிறந்து விளங்குகிறார். குங்குமராஜுக்கு தன் இயலாமை மற்றும் விரக்தியை மற்ற நபர்கள் மீது வெறுப்பாக காட்டி குங்குமராஜ் நடிப்பில் ஸ்கோர் செய்தாலும், அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கும் வைரமாலா, பையை தொலைத்துவிட்டு, குற்ற உணர்வில் பர்வேஸ் குடும்பத்தை பார்க்க மறுக்கும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.
வட இந்திய வாலிபர் வேடத்தில் நடித்திருக்கும் பர்வேஸ் மெஹ்ரூ, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ரமேஷ் வைத்யா, நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் செந்தில் கோச்சடை, பர்வேஸின் தந்தையாக நடித்திருக்கும் பிண்ட்டூ, பர்வேஸின் இளம் மனைவி ஷமீரா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் கேமரா கதை நடக்கும் களத்திற்கு நம்மையும் அழைத்துச் செல்கிறது. எஸ்.ஜே.ஜனனியின் இசை காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்திருப்பதோடு, காட்சிகளின் இயல்புத்தன்மை மாறாமல் பயணிக்க வைக்கிறது. பாடல்கள் மிக அருமை. இவருக்கு இசைத்துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் பாஸ்கர் சக்தி, பிழைப்பு தேடி சென்னைக்கு மற்றும் தமிழகம் வருவோர் மற்றும் வேறு ஊர்களுக்கு செல்வோர் பற்றிய ஒரு கருத்தை மிக அற்புதமாக சொல்லிவிட்டு போனாலும், அதன் மூலம் படம் பார்ப்பவர்களை யோசிக்க வைத்துவிடுகிறார்.
வட மாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்பவர்களை ஏளனமாக பார்ப்பவர்கள் மற்றும் பேசுபவர்களுக்கு குட்டு வைக்கும் விதத்தில் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் பாஸ்கர் சக்தி, தமிழக இளைஞர்கள் பெரும்பாலனவர்கள் மதுவுக்கு அடிமையாகி, உழைப்பின் மீது நாட்டம் இல்லாமல் சோம்பேறிகளானதால் தான் என்ற வலிதரும் உண்மையை வட மாநிலத்தவர்களுக்கு இங்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது, என்பதை அழுத்தமாக சொன்னதோடு “யாராலும் யாரோட வாய்ப்பையும் கெடுக்கவோ பறிக்கவோ முடியாது, நாம நாம் உண்மையாக கடினமாக உழைத்தால் எங்கேயும் பிழைக்கலாம்” என்ற நல்ல செய்தியை நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்.
ஒரு காட்சி கூட ரயிலை காட்டாமல், படத்திற்கும் சம்மதம் இல்லாமல் தலைப்பு வைத்தது கதைக்கும், காட்சிக்கும் தலைப்புக்கும் ஒட்டவில்லை.
“ரயில்” சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து நிச்சயம் பல விருதுகள் பெறும். உணர்வுபூர்வமான படத்தை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்து.
நடிகர்கள் :-
ஹீரோ – குங்குமராஜ்
ஹீரோயின் – வைரமாலா
வடக்கன் – பர்வேஸ் மெஹ்ரூ
வரதன் – ரமேஷ்வைத்யா
ஹீரோயின் அப்பா – செந்தில் கோச்சடை
டிம்பிள் – ஷமீரா
வடக்கன் அப்பா – பிண்ட்டூ
வடக்கன் அம்மா – வந்தனா
குழந்தை – பேபி தனிஷா
திருப்புளி – சுபாஷ்
இன்ஸ்பெக்டர் – தங்கமணி பிரபு
மில் மேனேஜர் – ரமேஷ் யந்த்ரா
அக்கவுண்டண்ட் – சாம் டேனியல்
வடக்கன் ஃப்ரெண்ட் – ராஜேஷ்
கான்ஸ்டபிள் – ராமையா
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
தயாரிப்பாளர் – வேடியப்பன்
இயக்குநர் – பாஸ்கர்சக்தி
ஒளிப்பதிவு – தேனிஈஸ்வர்
இசையமைப்பாளர் – S.J. ஜனனி
எடிட்டர் – நாகூரான் இராமச்சந்திரன்
சவுண்ட் – ராஜேஷ் சசீந்திரன்
பாடலாசிரியர் – ரமேஷ் வைத்யா
மேனேஜர் – உசிலை சிவா
#railmoviereview #rail #railmovie #railreview #railtamilmoviereview #railtrailer #railmovieupdates
மதிஒளி ராஜா