“ரத்னம்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ஸ்டோன் பெஞ்ச் சார்பாக கார்த்திகேயன் சந்தானம் & ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவி ஶ்ரீ பிரசாத் இசையில், விஷால் நாயகனாக நடிக்கும் படம் “ரத்னம்”.

இயக்குனர் ஹரி – விஷால் கூட்டணியில் மூன்றாவது படம். ஆக்சன் – சென்டிமென்ட் கலவையே ரத்னம் படம்.

வேலூரில் ரவுடியுமாக இருக்கிறார் ரத்னம் (விஷால்) எம்.எல்.ஏவாக உள்ள பன்னீர்செல்வத்தின் (சமுத்திரக்கனி) அடியாளாகவும் இருக்கிறார். அப்போது தான் வேலூருக்கு நீட் தேர்வு எழுதவரும் மல்லிகா (பிரியா பவானிசங்கர்) மீது இனம்புரியாத அன்பு ரத்னத்திற்கு வருகிறது.

மல்லிகாவைக் கொலை செய்ய, ஆந்திர மாநில எல்லைப் பகுதியின் மிகப் பெரிய தாதாக்களாக இருக்கும் பீமா ராயுடு (முரளி சர்மா), சுப்பு ராயுடு (ஹரீஷ் பேரடி) ராகவா ராயுடு (வேட்டை முத்துக்குமார்) என்ற மூன்று சகோதரர்களும் முயல, அதை முறியடிப்பதோடு, மல்லிகாவைப் பாதுகாப்பதையே முழுநேர பணியாகக் கொள்கிறார் ரத்னம்.

ரத்னத்திற்கும் மல்லிகாவைக் காக்க ஏன் இவ்வளவு சிரத்தையெடுக்கிறார்? தாதாக்கள் ஏன் மல்லிகாவைத் துரத்துகிறார்கள்? இறுதியில் ரத்னம் தாதாக்களை அழித்தாரா? போன்ற கேள்விகளுக்கு அடிதடி, வெட்டுக்குத்து, ரத்த மழையால் நம்மை மூழ்க வைத்து பதில் சொல்கிறது ‘ரத்னம்’.

விஷால் சென்டிமென்ட் காட்சிகளில் தன் உடல்மொழியால் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார். மார்க் ஆண்டனியின் வெற்றி இவருக்கு புது தெம்பு அளித்துள்ளது நன்றாக தெரிகிறது.

வழக்கமான ஹரி படம் போல் தான்  வசனங்களிலும், திரைக்கதை விறுவிறுப்பாக அமைத்தலில் வெற்றி அடைந்துள்ளார்.

சுவாரஸ்யம் தரும் சமுத்திரக்கனி கதாபாத்திரம் படத்திற்க்கு மெருகுட்டுகிறது. முரளி சர்மா, ஹரீஷ் பேரடி, “பேட்ட” முத்துகுமார் என மூன்று வில்லன்கள் அசத்தியுள்ளனர். யோகி பாபு தன் பங்கிற்கு நகைச்சுவையை தாராளமாக வழங்கியுள்ளார்.

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இடைவேளை கார் சேஸிங் ஆக்‌ஷன் காட்சி அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரனின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.  சண்டை இயக்குனர்கள் 4 பேர் ஒவ்வொரு சண்டைக்காட்சியில் வித்தியாசம் நன்றாக தெரிகிறது 4 சண்டை இயக்குனர்கள் பாராட்டுக்குரியவர்கள். இசை தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் மிரள வைக்கிறார் பாடல் இசை மற்றும் பின்னணி இசை வழங்கியதில் முன்னணியில் இருக்கிறார்.

TS ஜெய் படத்தொகுப்பு படத்தின் வேகத்திற்கு கைக்கொடுக்கிறது. PV பாலாஜி கலை இயக்கம் மிக அருமை. ஆக மொத்தம் ஜனரஞ்சகமான படம் “ரத்னம்”.

‘RATHNAM’ MOVIE CAST :-

Vishal – Rathnam
Priya Bhavani Shankar – Mallika
Samuthrakani – Panneer selvam
Vijaya kumar
Delhi Ganesh – Neelakandan
Yogi Babu – Moorthy
Gowtham Vasudev Menon – Anbalagan
Jayaprakash – Vedha Nayagam
Murali Sarma – Beema Rayudu
Harish Peradi – Subba Rayudu
Muthu Kumar- Ragava Rayudu
“Naan kadavul” Rajendran- Thiruthani Magesh
GajaRaj
VTV Ganesh
Y.G. Mahendran
MohanRam
C. Ranganathan
Ganesh Venkatram
‘Kumki ” Aswin
Anjali Devi
Thulasi

*CREW*

Story, Screenplay, Dialogue and Direction – Hari
Music – Devi Sri Prasad
DOP – M Sukumar
Stunt – Kanal Kannan, Peter Hein, Dhilip Subbrayan, Vicky
Lyric – Viveka
Art Director – P V Balaji
Editor – T S Jay
Choreographer – Dinesh
Special Effect – Sethu
Production Executive – Rajendran
Production Controller – P.S.Ganesh
Executive Producer : Ashok Narayanan M
Associate Producer : Pavan Narendra
Co Produced by : Kalyan Subramaniam , Alankar Pandian (Invenio Origin)
Produced by : Kaarthekeyen Santhanam, Zee Studios
Production Banner: Stone Bench Films & Zee Studios
Audio on Aditya Music
PRO : Nikil Murukan (Tamil)

#rathnammoviereview #rathnammovie #rathnamreview #Rathnam #rathnam #moviereview #movie #review

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author