“ரூட் நம்பர் 17” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

நேனி என்டர்டெயின்மென்ட் சார்பாக டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில்,  அபிலாஷ் தேவன் எழுத்து – இயக்கத்தில், ஜித்தன் ரமேஷ் மிரட்டல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரூட் நம்பர் 17.

இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ், அஞ்சு ஓண்டியா, ஹரிஷ் பேரடி, அகில் பிரபாகர், அனுஸ்ரீ போத்தன், ஜார்ஜ், நிகில் அமர், அருவி மதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒசேப்பச்சான் இசையமைக்க பிரசாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கார்த்திக் – அஞ்சனா இளம் காதல் ஜோடி ஜாலியாக ஒரு நாள் இன்ப சுற்றுலா போக, விபரீதம் தெரியாமல், கவன அறிவிப்பு பலகையை பார்க்காமல் ரூட் நம்பர் 17 வழியில் மாலை 6 மணிக்கு மேல் செல்கிறார்கள்.

இதனால், ஆபத்தான – கொடூரமான ஜித்தன் ரமேஷிடன் சிக்கிக் கொள்கின்றனர். போலீஸ் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது.

ஜித்தன் ரமேஷ் ஏன் கொடுரமானவர் ஆகிறார்? காதல் இளம் ஜோடி நிலை என்ன? போலீஸ் இளம் ஜோடியை மீட்டு எடுத்ததா? ஜித்தன் ரமேஷ் செய்யும் கொலைகளுக்கு பின்னணி என்ன? பழிக்குப்பழி நோக்கமா? என்பதை வெள்ளித்திரையில் காண்க.

ஜித்தன் ரமேஷ் இதுவரை பார்க்காத விதம் புது கதாப்பாத்திரத்தில் சிறப்பாக செய்துள்ளார். நாயகி அஞ்சு ஓண்டியா இளமை – அழகு – கவர்ச்சி – நடிப்பு என மிக அருமையாக செய்துள்ளார். தமிழ் திரையுலகிற்கு நல்ல வரவு.

போலீஸ் கான்ஸ்டபிள் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அருவி மதன் குமார் படத்தின் நாயகன் என்று கூறும் விதம் சரியாக நடித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தேர்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஹரிஷ் பேரடியின் அனுபவ நடிப்பு படத்தில் சிறிது நேரம் வந்தாலும் கவனத்தை ஈர்க்கும். பத்திரிகையாளராக வரும் டைட்டஸ் ஆபிரகாம் நேர்த்தியான நடிப்பு அருமை.

இளம் வயது ஜித்தன் ரமேஷாக வரும் மாஸ்டர் நிஹல் அவரது தாயாராக நடித்தவரும் ஃபிளாஷ் பேக் காட்சிகளுக்கு நியாயம் செய்துள்ளனர்.

இசை பாடல் மற்றும் பின்னணி இசை மிக அருமை. இது போன்ற திரில்லர் திரைப்படம் பின்னணி இசை – ஒளிப்பதிவு – படத்தொகுப்பு & கலை இயக்கம் பணிகள் முக்கியமான விசயமாக இருந்தால் மட்டுமே சிறப்பாக அமையும். அந்தவிதத்தில் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இயக்கம் – திரைக்கதை மிக சிறப்பு.

ரூட்  நம்பர் 17 மிக சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். நிச்சயமாக ரசிகர்களை இருக்கைகளில் கட்டி போடும். ஜித்தன் ரமேஷ் – அஞ்சு ஓண்டியா – அருவி மதன் குமார் – டாக்டர் அமர் ராமச்சந்திரன் – இயக்குனர் அபிலாஷ் தேவன் – இசையமைப்பாளர் ஒசேப்பச்சான் ஆகியோருக்கு நிச்சயம் சபாஷ் போடலாம்.

#routeno17moviereview #routeno17movie #routeno17review #routeno17 #fdfs #theatre #audience #moviereview #movie #review #boxoffice #audiencereview #theatrereview #tamilmovie #tamilmoviereview

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author