சந்தானம் நடிக்கும் “இங்கு நான் தான் கிங்கு” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் GN அன்புசெழியன் வெளியீட்டில், சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், D இமான் இசையில், சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, பாலசரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், சேஷு, மனோ பாலா நடிப்பில் உருவாகியுள்ள படம்  “இங்கு நான் தான் கிங்கு”.

தனியார் மேட்ரிமோனியில் பணிப்புரியும் சந்தானம், தனக்கு இருக்கும் ரூ.25 லட்சம் கடனை அடைக்க முன்வரும் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கிறார்.

அவருக்கு பெரிய ஜமீன் குடும்பத்தில் இருக்கும் நாயகியுடன் (பிரியாலயா) திருமணம் நடக்கிறது. ஆனால் இதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இதற்கிடையில் தனக்கு கடன் கொடுத்த மேனேஜருடன் (விவேக் பிரசன்னா) தன் மனைவி குடும்பத்துடன் (தம்பி ராமையா, பாலசரவணன்) ஏற்படும் பிரச்சினையில் உடனடியாக கடனை திருப்பி தரும் சூழ்நிலை ஏற்படுகிறது. சந்தானம் குடும்பத்தால் அவர் கொல்லப்படுகிறார்.

ஒருவழியாக இந்த கொலையை மறைத்து விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் அதே மேனேஜர் சந்தானம் வீட்டில் உயிருடன் இருக்கிறார். அப்படி என்றால் கொலை செய்யப்பட்டது யார்? சந்தானம் தன் திருமணத்தால் எப்படி ஏமாறுகிறார்? சந்தானத்தின் கடன் பிரச்சனை எப்படி தீர்ந்தது?  என்பதை வெள்ளித்திரையில் காண்க.

சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன், பிரியா லயா கூட்டணி காமெடியில் சிறப்பாக அமைந்துள்ளது. சந்தானம் காமெடி கிங்கு என்பதில் சிறிது கூட சந்தேகமில்லை இந்த படத்தில் கூடுதலாக டான்ஸில் மாஸ் காட்டியிருக்கிறார். சந்தானம். பிரியா லயா தமிழ் திரையுலகிற்கு நல்ல வரவு. நடிப்பு சிறப்பு, நடனத்தில் மிக சிறப்பு, அசத்தியுள்ளார்.

தம்பி ராமையா படத்தின் இரண்டாம் நாயகனாக கலக்கி இருக்கிறார். பால சரவணன் நடிப்பும், நகைச்சுவையும் ரசிகர்களை மிகவும் கவர்கிறது. விவேக் பிரசன்னா நடிப்பு அருமை.

D இமான் இசையில் பாடல்கள் இசை மற்றும் பின்னணி இசை மிக மிக சிறப்பு. எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் மிக அருமை நகைச்சுவையில் சிக்ஸர் அடித்துள்ளார். கோபு பாபு, கிரேசி மோகன் வரிசையில் எழிச்சூர் அரவிந்தன் அவர்களுக்கு நிச்சயம் இடம் உண்டு.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம், நடனம் படத்திற்க்கு கூடுதல் பலம். நகைச்சுவை படம் இயக்குவது மிகப் பெரிய சவால் அதை மிக அருமையாக கையாண்டு வெற்றிப் படமாக வழங்கியுள்ளார் இயக்குனர் ஆனந்த் நாராயணன். கோபுரம் ஃபிலிம்ஸ் மிகப் பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.

சந்தானம் நாயகனாக நடிக்க துவங்கியதில் இருந்து இன்று வரையில் அவர் நடித்த அனைத்து படங்களிலும் இப்படம் முதல் இடத்தை வகிக்கும் என்பதில் சிறிது கூட ஐயம்மில்லை.

“இங்கு நான் தான் கிங்கு” படம் சிரிப்புக்கு இரண்டு மடங்கு உத்திரவாதம். ரசிகர்களை விலா எலும்பு நோக சிரிக்க வைக்கும்.

GOPURAM FILMS G.N. ANBUCHEZHIAN PRESENTS, PRODUCED BY SUSHMITA ANBUCHEZHIAN “INGA NAAN THAAN KINGU”

CAST :-

SANTHANAM – VETRIVEL

PRIYALAYA – THENMOZHI

THAMBI RAMAIYA – VIJAYAKUMAR (JAMEEN)

BALA SARAVANAN – BALA (CHINNA JAMEEN)

VIVEK PRASANNA – AMALRAJ

MUNISHKANTH – BODY BALRAM

SWAMINATHAN – SWAMI

MAARAN – ROLEX

SESU – VINOTH

CREW :-

DIRECTOR – ANAND NARAYAN

CAMERAMAN – OM NARAYAN

MUSIC DIRECTOR – D.IMMAN

EDITOR – M.THIYAGARAJAN

WRITER – EZHICHUR ARAVINDAN

ART DIRECTOR – SAKTHEE VENKATRAJ.M

CHOREOGRAPHER – BABA BHASKAR, KALYAN

FIGHT MASTER – MIRACHLE MICHAEL

LYRIC WRITER – VIGNESH SHIVAN, MUTHAMIL

PRODUCTION EXECUTIVE – M.SENTHIL KUMAR

PRODUCTION CONTROLLER – M.PACHIAPPAN

COSTUME DESIGNER – R.K. NAVADEVI RAJKUMAR

COSTUMER – R. MURUGANANTHAM

SOUND MIX – T.UDAYAKUMAR, KNACK STUDIO, SHADE 69 STUDIOS

MAKEUP MAN – A. GOTHANDAPANI

STILLS – S. MURUGADASS

COLOURIST – PRASATH SOMASEKAR

PRO – NIKIL MURUKAN

DESIGNS – N.T. PRATHOOL

CREATIVE EXECUTIVE – JAAYAVELMURUGUN

PRODUCTION HEAD – ANIL KUMAR .M.K

PRODUCER – G.N ANBUCHEZHIAN

PRODUCED BY – SUSHMITA ANBUCHEZHIAN

#ingunaanthankingumoviereview #infunaanthankingumovie #ingunaanthankingureview #ingunaanthankingu #moviereview #movie #review

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author