“சூரகன்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

3rd ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பாக கார்த்திகேயன் கூடுதல் திரைக்கதை எழுதி, நாயகனாக நடித்து, தயாரிப்பில், சதிஷ் கீதா குமார் ஒளிப்பதிவு & இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “சூரகன்”.

மன்சூர் அலிகான்,

ஆர் பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சுரேஷ் மேனன், வின்சன்ட் அசோகன் என்று பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கதையின் நாயகன் கார்த்திகேயன் காவல் அதிகாரியாக இருக்கிறார், இவருக்கு நடந்த ஒரு விபத்தில் பார்வையில் தலைகீழ் உருவ பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சூழ்நிலையில் இவர் எதிரிகளை சுடும்போது எதிர்பாராமல் தவறுதலாக ஒரு அப்பாவி பெண்ணை சுட்டு விடுகிறார்,

இதனால் இவரின் வேலையில் இருந்து சஸ்பென்ட் செய்ய படுகிறார். ஒருநாள் இவர் வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது ஒருபெண் அடிபட்டு கிடப்பார், அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார் அவர் இறந்துவிடுகிறார். இந்த மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று உணருகிறார்.

நிழல்கள் ரவியின் பேத்தியும் மர்மமான முறையில் இறந்திருப்பார், இவர் கார்திகேயனிடம் தன் பேத்தி இறப்பிறகு யார் காரணம் என தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்க சொல்கிறார். இந்த கேஸை பற்றி விசாரிக்கும் சமயத்தில் மற்றொரு பெண் மர்மமான முறையில் இறக்கிறார்.

இந்த 3 பெண்களின் இறப்பிற்கு என்ன தொடர்பு என்பதையும், இந்த கொலைக்கெல்லாம் யார் காரணம் என்பதை கதையின் நாயகன் கார்த்திகேயன் கண்டுபிடித்தாரா? இல்லையா? இவருக்கு யார் உதவியாக இருக்கிறார்கள்? யார் எதிராக இருக்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் சதிஷ் கீதா குமார் இயக்கியுள்ளார்.

நாயகன் கார்த்திகேயன் தமிழ் திரையுலகிற்கு நல்வரவு, நடனம், சண்டை, நடிப்பு என அனைத்தும் சிறப்பாக செய்துள்ளார். நாயகி சுபிக்ஷா கிருஷ்ணன் அழகு பதுமை, கிளாமர் தூக்கல் நடிப்பும் நன்று.

வினோதினி வைதியநாதன் நன்றாக நடித்துள்ளார். வின்சன்ட் அசோகன், மன்சூர் அலிகான் இருவரும் மிரட்டி இருக்கிறார்கள். ஆர் பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சுரேஷ் மேனன், மிப்பு சாமி நால்வரும் சிறப்பாக செய்துள்ளனர். சுபிக்ஷா LA, தியா இருவரின் இளமை ததும்பும் அழகு மற்றும் நடிப்பு படத்திற்கு பிளஸ்.

நடனம் ஶ்ரீதர் அற்புதமாக அமைத்துள்ளார். டேன்சர் மணி சண்டைக்காட்சிகள் சிறப்பு.

ஜேசன் வில்லியம்ஸ் & சதீஷ் கீதா குமார் ஒளிப்பதிவு அருமை. அச்சு ராஜாமணி பாடல் & பின்னணி இசை சிறப்பு.

படத்தொகுப்பு கலை இயக்கம் அருமை.

புலனாய்வு பட ரசிகர்களுக்கு நல்ல விருந்து. புதிய கதைக்களம். திரைக்கதை நல்ல விறுவிறுப்பு. வசனம் நச். இயக்குனர் முதல் படத்தினிலேயே  வெற்றிப் பெற்றுள்ளார். இளைஞர்களை கவரும் படம் “சூரகன்”.

 

“SOORAGAN” “சூரகன்”

Actors :-

Karthikeyan – Eegai vendhan

Subiksha Krishnan – Ilakkiya

Suresh menon – Devaraj

Pandiarajan – chidambaram

Reshma pasupuleti – Lakshmi Akka

Vincent Ashokan – Sethu

Mansoor alikhan – Mamamia

Vinothini – Chithirai selvi

Nizhalgal Ravi – Varadharajan

Mippusamy – Prabha

 

Technicians

Produced by :V.Karthikeyan

Banner : 3rd Eye Cine Creations

Director Writer screenplay – Sathish Geetha Kumar

Additional screenplay – Karthikeyan

Music – Achu RajaMani

Background score – Yanamandra Raghav

Lyrics- ku.karthick, dhirav

Executive Producer : P.karthick

Dop : sathish geetha kumar, jason willams

Editor : Ram sudharshan

Art director :dinesh mohan dfa

Choreographer :Kalaimamani sridhar

Costume designer : keerthivasan

Action Director : danger mani

You May Also Like

More From Author