PBS புரொடக்ஷன்ஸ் சார்பாக P யுகேஷ்வரன் தயாரிப்பில், முஹம்மத் ஆசிப் ஹமீத் இயக்கத்தில், ஜெயகுமார், நாசர், தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, தாரணி, மனீஷா சபீர், யாமினி, வினோதினி, வினோத் கிஷன், அர்ஜெய், சேகர், பாரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபீர் அலி நடிப்பில் உருவாகியுள்ள படம் “தி அக்காலி”.
போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும்போது, இடுகாடு மயானத்தில் புதைக்கப்படும் பிணங்களை எடுத்து அந்த குழிகளில் போதைப் பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்கிறது.
இதனால் ஜெயக்குமார் தலைமையிலான குழு ரகசியமாக அதை கவனிக்கிறது. அப்போது பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவருகிறது. சாத்தானை வழிபடும் கும்பல் அங்கே விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்கள் நரபலி கொடுப்பதையும் ஜெயக்குமார் கண்டுபிடிக்கிறார்கள். இது தொடர்பாக அவர் விசாரணையும் நடத்துகிறார். ஆனால், இதை அவரது உயர் அதிகாரி தடுக்கிறார். இருந்தும் ஜெயக்குமார் இதை தொடந்து தீவிரமாக விசாரிக்கிறார்.
இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அப்போது அவரை சுற்றி பல மர்மமான விஷயங்கள் நடைபெறுகிறது. இறுதியில் ஜெயக்குமார் அந்த நபர்களை கண்டுபிடித்தாரா? அவரை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்ன என்ன? இதனால் ஜெயக்குமாருக்கு என்ன விளைவுகள் ஆனது? இந்த பிரச்சனைகள் எப்படி ஜெயக்குமார் சமாளித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. சாத்தான்களை வழிபடுபவர்கள், நரபலி கொடுக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் க்ரைம் திரில்லர் பாணியில் கொடுத்திருக்கிறார்.
கொஞ்சம் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். சுவாரசியம் பஞ்சம் இல்லை. படத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் ஜெயக்குமார், நாசர், தலைவாசல் விஜய், வினோதினி ஆகியோரின் நடிப்பு நன்றாக இருக்கிறது. இந்தப்படத்தில் பயன்பட்டிருக்கும் லொகேஷன்கள் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. வழக்கம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் செய்திருக்கிறார்கள் பாராட்டுகள்.
கலை இயக்குனர் தோட்டா தரணியின் பணி படம் முழுவதுமே தெரிகிறது. படத்தில் பாதி காட்சிகள் கிராபிக்ஸ் என்றாலும், கலை இயக்கமும் சிறப்பாக இருக்கிறது. விஎப்எக்ஸ் காட்சிகள் படத்திற்கு முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. வித்தியாசமான கதைக்களமாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் விறுவிறுப்பை அற்புதமாக வழங்கியுள்ளார்.. ஒரு சில காட்சிகள் சிறப்பாக காண்பித்து பிரமிப்பு ஏற்றி இருக்கிறது.
படத்தின் ஆரம்பம் எதிர்பார்ப்போடு இருக்கிறது. அதோடு இறுதி கிளைமாக்ஸ் காட்சிகளும் அற்புதம். நிறைய புதிய காட்சிகளை காண்பித்திருக்கிறார். சில காட்சிகள் படம் எங்கே செல்கிறது என்று சுவாரஸ்யம் குறையாத அளவிற்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தத்தில் வித்தியாசமான கதைக்களமாக இருக்கிறது. அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் வெற்றி கோட்டையை தொட்டுவிட்டார். பொழுதுபோக்கு குறைவில்லாத படமாகத்தான் இருக்கிறது.
“THE AKAALI” Movie
CAST :-
Nasser – Donald/ Sebastian Halloway
Jai kumar – Hamzah Rahman
Thalaivasal Vijay – Vijay
Swayam sidha – S Sowmya
Vinoth Kishan – Vincent
Vinodhini – Dakshyani
Arjai – Selvam
Sekar – David
Yamini – Yasmine
Dharani – Anitha
Bharath – Gautham
Elavarasan – Eesa
Vignesh Ravichandran -Vicky
Sabir Ali – Sabir Ali
Masiha sabeer – Janice
CREW :-
Director – Mohammed Asif Hameed
Producer – P Ukeshwaran
DOP – Giri Murphy
Art Director – Thota Tharani
Costume Designer – Poornima
Editor – Iniyavan Pandian
Stunts – Dinesh Kasi
Iniyavan (Fix it in Post) – Vfx
Dubbing Engineer – Ram Kathirvelu
Dubbing Studio – Nam studios
PRO – Nikil Murukan
#theakaalimoviereview #theakaalimovie #theakaalireview #theakaaki #akaali
மதிஒளி ராஜா