மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதாம் பாவா தயாரிப்பு, இயக்கத்தில், வித்யாசாகர் இசையில், அமீர் சுல்தான், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், சரவணசக்தி, மாரிமுத்து, கஞ்சா கருப்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் “உயிர் தமிழுக்கு”
எம்ஜிஆர் ரசிகனான அமீர் (எம்ஜிஆர் பாண்டியன்) தான் வசிக்கும் பகுதியில் கேபிள் டிவி தொழில் செய்து வருகிறார்.
இமான் அண்ணாச்சிக்காக தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய போகும் அமீர் பார்த்த உடனேயே நாயகி சாந்தினி ஸ்ரீதரன் மீது காதல் வயப்படுகிறார். நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கவுன்சிலர் தேர்தலுக்கு போட்டியிடுகிறார். நாயகியை எப்படியாவது கரம் பிடிக்க வேண்டும் என்று எண்ணும் அமீர் தானும் கவுன்சிலர் தேர்தலுக்கு நாயகிக்கு எதிர் முனையில் போட்டியில் களம் இறங்குகிறார்.
அந்தத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமீர் வெற்றி பெற்று தன் காதலிலும் வெற்றி பெறுகிறார். இந்தக் காதலுக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. வும் சாந்தினி ஶ்ரீதரன் தந்தையுமான ஆனந்தராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அமீருக்கும் அவருக்கும் எதிர்ப்பு ஏற்படுகிறது. இதற்கிடையே ஆனந்தராஜ் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
ஆனந்தராஜ் மீது இருக்கும் எதிர்ப்பு காரணமாக அமீர் தான் இந்தக் கொலையை செய்தார் என நாயகி சாந்தினி முடிவெடுத்து அவரை ஜெயிலுக்குள் தள்ளி விடுகிறார். ஜாமீனில் வெளியே வரும் அமீர் ஆனந்த்ராஜ் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் நாயகி சாந்தினி ஸ்ரீதரணை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்.
இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சாந்தினி ஸ்ரீதரன் அவர்களுக்கு தன் தந்தை மரணம் மூலம் அனுதாப அலையால் நல்ல செல்வாக்கில் இருக்கிறார். இதனால் அமீர் அவர்களுக்கு வெற்றி பெற சிரமம் ஏற்படுகிறது.
இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று சாந்தினியை அமீர் கரம் பிடித்தாரா? இல்லையா? ஆனந்தராஜை கொலை செய்தது யார்? அமீர் நிரபராதியா? அல்லது குற்றவாளியா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
நல்ல அரசியல் நையாண்டி படம். அமீர் புதிய பரிமாணத்தில் நகைச்சுவையில் அசத்தியுள்ளார். இமான் அண்ணாச்சி நகைச்சுவை கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
சத்யராஜ், மீனா, கவுண்டமணி & மணிவண்ணன் நடிப்பில் வந்த மாமன் மகள், தனுஷ் – த்ரிஷா நடிப்பில் வந்த கொடி, சத்யராஜ் – மணிவண்ணன் கூட்டணியில் வந்த அமைதி படை படங்களின் சாயல் “உயிர் தமிழுக்கு” படம்.
இன்றைய அரசியல் கிண்டல்கள் மூலம் மேலும் மெருகேற்றப்பட்டு ஜனரஞ்சமான முறையில் உருவாகியுள்ளது.
வித்யாசாகர் இசையில் பாடல்கள் சூப்பர் பின்னணி இசை அருமை. தேவராஜ் ஒளிப்பதிவில் அரசியல் தேர்தல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமகால அரசியலை நையாண்டி செய்து இயக்கியிருக்கும் உயிர் தமிழுக்கு திரைப்படம் அதனுள் காதல் கதையும் வைத்து ரசிகர்களுக்கு குடும்பத்துடன் சென்று சிரித்து ரசிக்கும்படியான படமாக அமைந்துள்ளது.
உயிர் தமிழுக்கு ரசிகர்களை ரசிக்க வைக்கும் என்பதில் சிறிது கூட சந்தேகமில்லை. சிரிப்புக்கு உத்திரவாதம்.
MOVIE : UYIR THAMIZHUKKU
HERO : AMEER as PANDIAN
HEROINE: CHANDINI SREEDHARAN as TAMIL
CAST:
IMMAN ANNACHI as SUDALAI
ANANDRAJ as PAZHAKADAYAAR
RAJ KAPOOR as THALAIVAR
( THIRUCHELVAM )
SARAVANA SAKTHI as SETHU
MAARI MUTHTU as T.N.S
KANJA KARUPPU as PARAMAN
Technician :-
DIRECTOR: ADHAM BAVA
MUSIC : VIDYASAGAR
DOP : DEVARAJ
EDITOR: ASHOK
#uyirthamizhukkumoviereview #uyirthamizhukkumovie #uyirthamizhukkureview #uyirthamizhukku #movie review #movie #review #film #cinema #flick
மதிஒளி ராஜா