டீம் A வென்ட்சர்ஸ் தயாரிப்பில், P. புகழந்தி இணை தயாரிப்பில், அமுதவாணன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “V3”.
வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, ஆடுகளம் நரேன், பாவனா கௌடா, எஸ்தர் அணில் ஆகியோர் நடித்திருக்கும் படம்.
விந்தியா – விக்டிம் (அப்பாவி) – வர்டிக்ட் (தீர்ப்பு) : Vindhya – Victim – Verdict : V3.
ஆடுகளம் நரேனுக்கு இரண்டு மகள்கள் அதில் மூத்த மகள் தேர்வு காரணமாக வெளியூர் சென்று வீடு திரும்பும் போது 5 நபர்களால் கற்பழிக்கப்படுகிறாள். கற்பழித்தவர்கள் பெரிய இடம் என்பதால், இதற்கு அரசாங்கம் தன் அதிரடி நடவடிக்கை எடுக்கிறது.
அதனால் ஒன்றும் அறியாத 5 அப்பாவி வாலிபர்களை என்கவுண்டர் செய்து சாகடிக்கிறார்கள். இது உண்மை அல்ல என்று அறிந்த இந்த வாலிபர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்காக வரலக்ஷ்மி சரத்குமாரை இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்க இந்த வழக்கு உண்மை நிலவரத்தை கண்டுபிடிக்கிறார். இதன் பின் என்ன என்பது தான் கதை.
உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததா? கற்பழிக்க பட்ட பெண் நிலைப்பாடு என்ன? என்பதை சிறப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
படத்தின் பலம் வரலக்ஷ்மி சரத்குமார், புதுமுகம் பாவனா மற்றும் ஆடுகளம் நரேன் இந்த மூவரின் நடிப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிக தைரியம் வேண்டும் அதை மிக சிறப்பாக செய்து இருக்கிறார் புதுமுகம் பாவனா இவருக்கு சலைத்தவன் நாங்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆடுகளம் நரேன் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார்.
மொத்தத்தில் V3 அனைவரும் குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய ஒரு படம். அதே சமயம் பாலியல் பலாத்காரம் கட்டுப்படுத்த ஒரு தீர்வும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அதற்காக இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.
சமூகத்தில் இன்றும் நடக்கும் அவலம் தான் இக்கதை. பெற்றோர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளுடன் பார்க்க வேண்டிய படம். வரும் முன் காப்போம். இது போன்ற படைப்புகளுக்கு வரவேற்பு கொடுப்போம்.
V3 Movie Cast & Crew Info
Cast
Varalaxmi Sarathkumar ( Sivagami)
Paavana ( Vindhya )
Esther Anil ( Viji )
Adukaalam Naren ( Velayutham )
Visarnai Kathai Asiriyar Chandra Kumar ( logo)
Ponmudi ( Viswanathan)
Jai Kumar
Sheeba
Crew
Direction – Amudhavanan
Music – Allen Sebastian
DOP – Siva Prabhu
Editor – Nagooran
Sound design – Udaya Kumar
Colorist – Sreeram Balakrishnan
Stunt – Mirattal Selva
Costumes – Tamil selvan
Make up – Hema – Meera
VFX – Quebec fx – Moses
SFX – Sathish Kumar
Production Manager – Santhosh Kumar | Muthuraman
PRO – Sathish Kumar Siva – Aim
Publicity Designer – NextGen
Executive producer – Pukazhenthi.
Production House :
Team A Ventures
மதிஒளி ச ராஜா
#v3moviereview #v3 #varalakshmisarathkumar #v3movie #v3review #aadukalamnaren #paavanagowda #estheranil #dhrshyam #review #moviereview #tamilfilmreview #mathiolirajaa #mathiolisrajaa