சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த படமாக வருகிறது “வா பகண்டையா”!

சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த படமாக வருகிறது “வா பகண்டையா”!

ஒளி ரெவிலேஷன் நிறுவனம் சார்பில், பி.ஜெயகுமார் இயக்கி, தயாரித்துள்ளார்!

இளைஞர்கள் அறிவு ஆயுதம் ஏந்தும் வகையிலும், காதலர்கள் உறவுகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளும் வகையிலும் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, பி.ஜெயகுமார் இயக்கியுள்ளார்!

சினிமா என்பது பொழுதுபோக்கையும் தாண்டி, மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்க கூடிய மிக்கப்பெரிய ஊடகமாகும். அதை வைத்துக்கொண்டு மக்களை நல்வழிப்படுத்தவும் முடியும், நாசமாக்கவும் முடியும், என்பதை தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான சில படங்கள் நிரூபித்துக் கொண்டு வருகிறது.

.அந்த வகையில், கமர்ஷியலாக உருவாகி இருந்தாலும், ‘சமூக அவலங்களை பேசும் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது ‘வா பகண்டையா’.

ஹீரோவாக விஜய தினேஷ் நடிக்க, ஆர்த்திகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். வில்லனாக அஜீத் கோலி நடிக்க, மற்றொரு வில்லனாக மும்பை நடிகர் யோகி ராம் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், நித்திஷ் வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். ஆரி ஆர்.ஜே.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ்

படத்தொகுப்பு செய்கிறார். சிவசங்கர், அக்‌ஷை ஆனந்த், விஜி ஆகியோர் நடனம் அமைக்க, இடி மின்னல் இளங்கோ

சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

‘வா பகண்டையா’ ஏப்ரல் 12’ம் தேதி

திரையரங்குகளில் வெளியாகிறது!

 

@GovindarajPro

You May Also Like

More From Author