“வித்தைக்காரன்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ஒயிட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பாக K விஜய் பாண்டி தயாரிப்பில், வெங்கி இயக்கத்தில், சதீஷ், ஆனந்தராஜ், ஜப்பான் குமார், சிம்ரன் குப்தா, மதுசூதன், சுப்ரமணிய சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் “வித்தைக்காரன்”.

இந்த படத்தில் சதீஷ் மேஜிக் மேனாக நடித்திருக்கிறார். சுப்ரமணிய சிவா தங்க கடத்தல், ஆனந்தராஜ் பண கடத்தல், மதுசூதனராவ் வைர கடத்தல் என செய்து வருகிறார்கள். முன்னாள் நண்பர்களாக இருந்த மூவரும் பிரிந்து தொழில் செய்து வருகிறார்கள்.

நாயகி சிம்ரன் குப்தா துப்பறியும் பத்திரிகை நிருபராக வருகிறார். நாயகி சிம்ரன் குப்தா மற்றும் பலரின் உதவியுடன் நாயகன் சதீஷ் கடத்தல் பேர்வழிகள் மூன்று பேரையும் பழி வாங்குகிறார்.

சதீஷ் இந்த படத்தில் மேஜிக் மேன் ஆகவும் விமான நிலையத்தில் குப்பை அள்ளுபவராகவும் நடித்திருக்கிறார். அயன் படத்தில் வருவது போல விமான நிலையத்தில் தங்கத்தையும் வைரத்தையும் கடத்தும் கும்பலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு, அவர்களுடன் இவருக்கு பிரச்சனை எப்படி வெடிக்கிறது. அதை இவர் எப்படி டீல் செய்து நாயகனாக ஜெயிக்கிறார் என்பது தான் இந்த வித்தைக்காரன் படத்தின் கதை.

ஏன் பழிக்குப்பழி? ஏதற்கு நாயகியை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்? என்பதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் வெங்கி.

நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்த சதீஷ் இப்படத்தில் வேறு கோணத்தில் நாயகனாகவே மாறி ரசிகர்களை ஏற்றுக்கொள்ள வைத்துள்ளார். தான் ஒருதலையாக காதலித்த பெண்ணை உயிருக்கு போராடும் நிலை என்று தெரிந்ததும், அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று தெரிந்தும் அவருக்கு பெரிய மருத்துவமனையில் நிறைய பணம் செலவு செய்து வைத்தியம் பார்ப்பது மனதை கவருகிறது.

சிம்ரன் குப்தா நடிப்பு சிறப்பு. ஆனந்தராஜ், ஜப்பான் குமார், சாம்ஸ் நடிப்பு வேற லெவல். சுப்ரமணிய சிவா, மதுசூதனராவ், இயக்குனர் வெங்கி, ஜான் விஜய் நடிப்பும் சிறப்பு.

VBR இசையில் பாடலும் – பின்னணி இசையும் படத்துடன் ஒன்றி போய் இருப்பது படத்திற்க்கு பலம். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ் பாயின்ட். அருள் இளங்கோ சித்தார்த்  படத்தொகுப்பு மற்றும் G துரைராஜ் கலை இயக்கம் அருமை.

நாயகன் சதீஷ் மேஜிக்மேன் என்று கூறி மேஜிக் காட்சிகள் குறைவாக வைத்திருப்பதும், சதீஷ் இரு வேடங்கள் என்று கூறி ஒரே காட்சியில் மட்டும் இருவர் என்று காட்டி இருப்பது சற்றே குறைப் போல் இருக்கிறது.

“வித்தைக்காரன்” திரைப்படம் பொழுதுபோக்கு உத்தரவாதம். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

Starring :

 

Sathish

Simran Gupta

Anandraj

Madhusudhan

Subramaniam Siva

John Vijay

Pavel Navageethan

Japan Kumar

Chaams

Banner : White Carpet Films

Produced by : K.Vijay Pandi

Written & Directed by : Venki

Music : VBR

DOP : Yuva Karthick

Editor : Arul Elango Siddharth

Art : G.Durairaj

Stunts : Stunner Sam

Costume Designer : Kiruthika Sekhar

Production Controller: S.N.Asraf

Production Executive: Hakkim Sulaiman

Stills : S.P.Suresh

PRO : Sathish (AIM)

Motion Poster: Aathi

Publicity Designer : Thandora

Co-Producer : R. Murali Krishnan

Associate Directors: A.Abilash, Aneesh Rathenam, Maris

Assistant Directors: G.Hariharan, Rajeshwaran.J, V.Prabakaran, V.K Senthil Rajan, Sriram GV, Vaseekaran Dhanavel, Zubedh Syed

#vithaikkaaranmoviereview #vithaikkaaranmovie #vithaikkaaranreview #vithaikkaaran #fdfs #tamilfilmreview #tamilmoviereview #moviereview #review #film #cinema #flick #audience #theatre #boxoffice

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author