துணிச்சல் மிக்க கபடி வீரராக களமிறங்குகிறார் ஜீவா (இஷோன்) நாயகன். இவர் காதலிக்கும் பெண்ணாக வருகிறார், மித்ரா (பிரணாளி). மித்ராவின் தோழி ஜெஸ்ஸி, டேனியல் பாலாஜி மற்றும் அவர் தம்பியின் மிரட்டல் கும்பலில் சிக்கிக்கொண்ட பெண்களுள் ஒருவர்.
இவரைக் காப்பற்றப் போகும் நாயகன் ஜீவாவும் நாயகி மித்ராவும் வில்லன் கும்பலுக்கு எதிராக மாறுகின்றனர். அந்த சண்டையில், டேனியல் பாலாஜியின் தம்பி, பப்புவின் கையை வெட்டி விடுகிறார் ஜீவா.
இதனால், தம்பியின் கையை வெட்டியவனை பழி வாங்கியே தீர வேண்டும் என முடிவெடுக்கிறார் டேனியல் பாலாஜி.
வில்லனிடம் இருந்து தப்பினார்களா? பாதிக்கப்பட்ட பெண்களின் கதி? நாயகியின் தோழி நிலை?
அறிமுக நாயகன் இஷோன் நல்ல வரவு, இளம் வயது விஜய் சேதுபதி போல் இருக்கிறார். நடிப்பு, சண்டை, ஆடல் என திறம்பட செய்து இருக்கிறார். நாயகி நல்ல அழகு சிறப்பான நடிப்பு. டேனியல் பாலாஜி தனது அனுபவ நடிப்பால் வில்லனாக அசத்தி இருக்கிறார் மற்ற கதாப்பாத்திரங்கள் அனைத்தும் படத்திற்கு தேவையானதை வழங்கியுள்ளது.
பாடல்கள் மனதில் நிற்கவில்லை பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவு அருமை. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கம் இவர் இயக்கம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் ஆனால் வருத்தம் தான்.
சமூகத்திற்கு நல்ல செய்தி வழங்கியுள்ள படம். நாயகன் தானே வழக்கம் போல் எல்லாவற்றையும் தன் தோள்களில் சுமந்து செல்லாமல் பாதிக்கபட்டவர்கள் முன்வர வேண்டும் என்ற எண்ணம் நல்ல விஷயம்.
“அரியவன்” நல்ல பொழுதுபோக்கு படம். விறுவிறுப்பு உத்திரவாதம்.
CAST :-
*HERO* ISHAAON( INTRODUCTION )
*HEROINE* PRRANALI ( INTRODUCTION )
*SUPPORTING ROLES* DANIEL BALAJI / SATHYAN / SUPERGOOD SUBRAMANI / RAMA / RAVI VENGATRAMAN / KALKI RAJA / NISHMA CHENGAPPA / RAMESH CHAKRAVARTHI
*CREW*
*SCREENPLAY & DIRECTION* MITHRAN R JAWAHAR
*CAMERA MAN* K.S. VISHNU SRI
*EDITING* M. THIYAGARAJAN
*SONG – MUSIC* JAMES VASANDHAN / VEDSHANKAR / GIRI NANDH
*VOCALS* HARIHARAN / K S CHITRA / HARICHARAN SESHADRI / VANDANA SRINIVASAN
*PRODUCED BY* MGP MASS MEDIA PRIVATE LIMITED
*EXECUTIVE MANAGER* ARANDHAI BALA
*EXECUTIVE PRODUCER* RAMESH CHAKKARAVARTI
*ASSISTANT EXECUTIVE PRODUCER* A. ANBU
*STORY * MAARISELVAN SU
*DIALOGUE* JEGA JEEVAN & MAARISELVAN SU
*LYRICS* MOHAN RAJAN / THAMAYANDHI
*DUBBING ENGINEER* K. SASIKUMAR – D.F. TECH
*ASSISTANT DIRECTOR* GOPI NAGARAJAN / S. ABINAYA / R. SARAVANA KUMAR / VIGNESH
*ASSOCIATE DIRECTOR* A. MUGILAN / RAJKANNA THAVASI
*CO-DIRECTOR* JEGA JEEVAN / MAARISELVAN SU
*COSTUMER* SIVA
*COSTUME DESIGNER* MEENAKSHI SHREEDHARAN
*MAKEUP* M.N BALAJI / SANJU ( HERO ) / VIVEK ( HEROINE ) / NITIN WAGHMARE
*RE RECORDING* GIRI
*STILLS* RAMASUBBU
*ART DIRECTOR* A. BALUMAHENDRA
*STUNTS* MAHESH MATHEW
*DANCE MASTER* ASHOK RAJA & M. SHERIF
*P.R.O* SATHISH KUMAR – SIVA (AIM)
*Background Score* VV & Team
#ariyavanmoviereview #ariyavanreview #ariyavanmovie #movie #review #tamilmoviereview #tamilmoview #cinema #film #filck #fdfs
மதிஒளி ராஜா