பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ராம் சங்கையா இயக்கத்தில், பசுபதி – ரோஹிணி நடிப்பில் உருவாகியுள்ள படம் “தண்டட்டி”.
“தண்டட்டி” என்பது கிராமத்துப் பெண்கள் கொஞ்சம் வயதான காலத்தில் காதில் மாட்டிக் கொள்ளும் தங்கத்தால் ஆன, கனமான கம்மல் என்னும் அணிகலன்.
கொஞ்ச காலத்தில் ஒய்வு பெற வேண்டிய வயதில், ஒரு குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால் மனித உரிமை அமைப்பின் விசாரணைக்கு ஆளாகி மாற்றல் வாங்கி புதியபகுதிக்கு வந்திருக்கும் காவலர் பசுபதி.
அந்தப் பகுதியில் கிடாரிப்பட்டி ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் போலீஸ் போகாது. காரணம் அவர்களை எல்லாம் போலீசால் சமாளிக்க முடியாது. வில்லங்கமான ஊர்.
அந்த ஊரில் இருந்து ஒரு சிறுவன் தன் பாட்டியைக் காணவில்லை என்று புகார் தர வருகிறான். மேலும் சில பெண்களும் தங்கள் அம்மாவைக் காணவில்லை என்று வருகிறார்கள் . காணமல் போனது ஒரே பெண் ரோஹிணி தான் .
மற்ற காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி விசாரணையில் இறங்கும் சீனியர் காவலர் பசுபதி, ரோஹிணியை கண்டு பிடிக்கிறார். ஆனால், அவர் இறந்து போக, சிறுவனின் வேண்டுகோள்படி இறந்து போன உடலோடு ஊருக்கும் வருகிறார். பாட்டியின் சுயநலமான பாசமில்லாத மகள்கள், மருமகள் , குடிகார மகன் இவர்கள் பற்றி தெரிந்துகொள்கிறார்.
இந்த நிலையில், பிணமாக இருக்கும் பாட்டியின் காதில் இருக்கும் – லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தண்டட்டி காணாமல் போகிறது.
பாட்டியின் மகன் (விவேக் பிரசன்னா) ”தண்டட்டியைக் கண்டுபிடித்துக் கொடுக்காவிட்டால் கொன்று விடுவேன்” என்று பசுபதியை மிரட்ட, மற்றவர்களும் கிண்டல் கேலி செய்ய, பிரச்சனையில் சிக்குகிறார் பசுபதி.
தண்டட்டியை திருடியது யார்? பசுபதி வில்லங்கமான ஊரில் இருந்து தப்பினாரா? மீண்டும் உயர் அதிகாரிகளிடம் தண்டனை வாங்கின்னாரா? ரோஹிணியின் இந்த தண்டட்டியின் சிறப்பு என்ன? என்பதை தெளிவாக அனைவருக்கும் புரியும் படி இயக்குநர் வழங்கியுள்ளார்.
தெளிவான திரைக்கதை. முதல் பாதியில் வரும் தண்டட்டியைப் போன்றே கனமான அந்த ஃபிளாஷ்பேக்கும் யூகிக்க முடியாத அற்புதமான அதன் தொடர்ச்சியான இரண்டாம் பகுதிக் காட்சிகளுமே இந்தப் படத்தின் உயிர்நாடி.
கதாநாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். மற்றும் ,மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த பாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
ரோகிணியும் வயதான கதாபாத்திரத்தில் தண்டட்டி அணிந்த பாட்டியாக நடித்துள்ளார்.
மண்வாசனை கலந்த கதை. அதில் உள்ள உண்மைத்தன்மையுடன் இயக்குநர் பார்த்து வளர்ந்த நிகழ்வுகளை கொஞ்சம் கற்பனையில் சேர்த்து புனைவு கதையாக உருவாக்கி உள்ளார். அதுவே படத்திற்கு இயல்பு தன்மை அளித்துள்ளது.
இந்தப்படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார்.
“தண்டட்டி” அனைவரையும் கவரும் தரமான படம். குடும்பத்துடன் பார்க்க கூடிய படம். நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. கிராமத்து பாரம்பரிய பழக்க, வழக்கங்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்லும் படம்.
நடிகர்கள் :-
பசுபதி – சுப்பிரமணி
ரோகிணி – தங்கப்பொண்ணு
விவேக் பிரசன்னா – சோ பாண்டி
முகேஷ் – செல்வராசு
தீபா சங்கர் – பொன்னாத்தா
பூவிதா – சின்னாத்தா
ஜானகி – பூவாத்தா
செம்மலர் அன்னம் – விருமாயி
தொழில்நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் – ராம் சங்கையா
ஒளிப்பதிவாளர் – மகேஷ் முத்துசுவாமி
இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி
எடிட்டிங் – சிவா
பாடல்கள் – பட்டினத்தார், ஏகாதசி, ராம் சங்கையா
தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன் குமார்
#thandattimoviereview #thandattimovie #thandattireview #thandatti #தண்டட்டி #basupathi #rohini #ammuabirami #vivekprassana #fdfs #movie #film #cinema #flick #moviereview #review #tamilfilm #audience #audiencereview #theater
மதிஒளி ராஜா