நல்லாட்சி மீடியா மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “நல்லாட்சி”
தேனிசைத் தென்றல் தேவா இசையில், டாக்டர் யாவரும் கேளிர் சோனியா அகர்வால் இணைந்து நடிக்கும் நல்லாட்சி
கதாநாயகன் ஜோசப்பென்ஷிகர்
என்ற இளைஞன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக தன் பெயரை யாவரும் கேளிர் என மாற்றிக் கொள்கிறான். மேலும் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக மாற்றுவதே தனது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு பயணிக்கிறார். கதாநாயகன் தனது இலட்சியத்தை எப்படி அடைகிறார் என்பதே “நல்லாட்சி” திரைப்படம்…
ஜோசப் பென்ஷிகர் என்ற இயற்பெயரை யாவரும் கேளிர் என மாற்றி, தன் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சி என்ற திரைப்படத்தை , தனது கனவு திரைப்படமாக தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ளார்.
மேலும், ஸ்ரீ தேவா ஜனனி, யோகப்ரியா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் நளினி, வடிவுக்கரசி, அனுமோகன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடிக்கின்றனர்.
உறுதிமொழியுடன் ஆரம்பித்த நல்லாட்சி திரைப்படம்.
திங்கள் கிழமை 4.8.2025 அன்று பூந்தமல்லியிலுள்ள LOYOLA COLLEGE-ல் நல்லாட்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – Dr.யாவரும் கேளிர்
இசை – தேனிசை தென்றல் தேவா
ஒளிப்பதிவு – நித்யானந்தம்
படதொகுப்பு – அருண்
நடனம் – கலா
சண்டைப்பயிற்சி – தவசி ராஜா
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சாவித்ரி
தயாரிப்பு & இயக்கம் மேற்பார்வை – தளபதி BSc, DFT
தயாரிப்பு – Dr. யாவரும் கேளிர் BE, MBA, Ph.D