“நேற்று இந்த நேரம்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

கிளாப்இன் ஃபிலிமோடைன்மென்ட் சார்பாக KR நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் KR இயக்கத்தில், ஷாரிக் ஹசன், ஹரிதா, KR நவீன் குமார், மோனிகா ரமேஷ், திவாகர் குமார், ஆனந்த், காவ்யா அமிரா, நிதின் ஆதித்யா, அரவிந்த், பாலா, செல்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் “நேற்று இந்த நேரம்”.

ஷாரிக் ஹசன் – ஹரிதா ஜோடி தங்களது 3வது காதல் ஆண்டு விழா கொண்டாடுவதற்கு, ஷாரிக் ஹசன், திவாகர் குமார், நிதின் ஆதித்யா, அரவிந்த், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா உள்ளிட்ட விஸ் காம் படித்து முடித்த நண்பர்கள் ஊட்டிக்கு இன்ப சுற்றுலா செல்கிறது.

சென்ற இடத்தில் ஷாரிக்கைக் காணவில்லை என்று திவாகர் குமார் போலீசுக்கு சொல்ல, போலீஸ் விசாரணை வளையத்துக்குள் வருகிறது. இதை இன்ஸ்பெக்டர் ராஜா விசாரிக்கிறார். அதன்பின், திவாகர் குமார் காணாமல் போகிறார். அந்த இடத்தில் ஒரு சைக்கோ கில்லர் சுற்றி வருகிறார் என்று தகவல் வருகிறது. ஒரு வேளை ஷாரிக் – திவாகர் குமார் இருவரும் சைக்கோ கில்லர் கொன்று இருக்க கூடுமோ என்று வழக்கு திசை மாறுகிறது.

உண்மையில் நடந்தது என்ன? ஷாரிக் – திவாகர் குமார் உயிருடன் வந்தார்களா? இத்தனை நாள் இவர்கள் நிலை? இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை வெற்றிப் பெற்றதா? சைக்கோ கில்லர் கொலை செய்தானா? என பல வினாக்களுக்கு விடை திரையில் காண்க.

அனைவரும் இளம் ஜோடிகள் தங்கள் பங்குக்கு காதல் – காம ரசத்தை படம் முழுவதும் வழங்கியுள்ளனர். இளமைக்கும், கவர்ச்சிக்கும் பஞ்சமில்லை. அழகை தாராளமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

கெவினின் பாடல் இசை மற்றும் பின்னணி இசை இப்படத்திற்கு மிகவும் உதவியுள்ளது. விஷாலின் ஒளிப்பதிவு ஊட்டி – பியூட்டிகள் அழகை நம் கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது. கோவிந்த் படத்தொகுப்பு திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.

சாய் ரோஷன் இயக்கம் நல்ல ஜனரஞ்சகமான படத்தை உருவாக்கியுள்ளது. இளைஞர்கள் – த்ரில்லர் பட ரசிகர்களை மனதில் கொண்டு இப்படத்தை உருவாக்கி வெற்றி அடைந்துள்ளார்

“நேற்று இந்த நேரம்”. படம் நிறைய டுவிஸ்ட்கள் அடங்கிய படம். அடுத்த காட்சியை யூகிக்க முடியாத அளவுக்கு சிறப்பாக எடுத்துள்ளனர். விசாரனை காட்சிகள் விறுவிறுவென இருக்கிறது. புதிய முயற்சிக்கு பாராட்டுகள்.

 

NETRU INDHA NERAM – Cast & Crew Details

 

Cast:

Shariq Hassan as Nikhil

Haritha as Rithika

Monica Ramesh as Shreya

Divakar Kumar as Rohit

Anand as Velraj

Kavya Amira as Nithya

Nithin Aaditya as Aadhitya

Aravind as Hrithik

Bala as Radhakrishnan

Selva as Vinay

K.R. Naveen Kumar as Raja

Crew:

Written & Directed by: Sai Roshan KR

 

Music: Kevin.N

 

Original Background Score: Kevin.N

 

DOP: Vishal.M

 

Executive Producer: Lalgudi M Hariharan

 

Editor: Govindh N

 

Singers: GV Prakash Kumar, Arivu, Aadithya RK, Ravi G, Paul B Sailus, Kevin.N, Reshma Shyam, Prithvee

 

Lyrics: Prabhakaran Amudhan, Paul B Sailus, Prithvee, Kevin.N, K.R. Naveen Kumar, Sai Roshan KR, Anand

 

Action Director: Om Prakash

 

PRO: Sathishwaran

 

Sound Design: Lalgudi M Hariharan

 

Production house: Clapin Filmotainment

 

Producer: K.R. Naveen Kumar

#netruinthanerammoviereview #netruinthanerammovie #netruinthaneramreview #netruinthaneram

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author