“உசுரே” திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா!!
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் “உசுரே” திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரை அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு, அகில உலக சூப்பர் ஸ்டார் “மிர்ச்சி” சிவா இயக்குநர் சுப்ரமணிய சிவா, இசையமைப்பாளர் சி சத்யா, லோகேஷ் அஜில்ஸ், இயக்குநர் வாலி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
ஒளிப்பதிவாளர் மார்கி சாய் அவர்கள் பேசியது :
அனைவருக்கும் வணக்கம் இந்த படம் பண்ணும்போது அவளோ சிறப்பா இருந்துச்சு 22 நாட்களில் எடுத்த படம் இது. எனக்கும் இயக்குனர் நவீனுக்கும் ஒரு கம்பர்ட் சோன் இருந்தது… இந்த மூவி ஷூட் விரைவாக முடிந்ததில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஏனெனில் எங்க இரண்டு பேருக்கும் அவ்ளோ நெருக்கம் இந்த படத்துல கிடைச்சது. இந்த படம் மண் சார்ந்த படம். என் கூட ஒத்துழைத்த என் டெக்னீசியன்ஸ் அனைவருக்கும் நன்றி. இதுதான் என் முதல் படமும் முதல் மேடையும் கூட அதனால் பத்திரிக்கையாளர் ஆகிய நீங்கள் இப்படத்திற்கு சப்போர்ட் பண்ணனும் என்று கேட்டுக் கொண்டார்.
நடிகை மந்த்ரா அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் உதயகுமார் அவர்களுக்கு நன்றி.. ரொம்ப நாளைக்கு அப்புறமா மறுபடியும் தமிழ்ல படம் பண்ணனும்னு ஒரு ஆசை.. அதற்கான நேரத்திற்காக காத்திருந்தபோது.. இயக்குனர் நவீனும் தயாரிப்பாளர் மவுலியும் இந்த கதையை சொல்லும்போது நான் உடனே ஓகே சொல்லிட்டேன்.. ஒரு இண்டிபெண்டன்ட் உமனா சேலஞ்ச் இருக்கிற கேரக்டரா நடிச்சிருக்கேன்.. ஒரு படத்திற்கு நான்கு தூண்கள் கண்டிப்பாக தேவை அந்த வகையில் இந்த படத்திற்கு நான்கு தூண்களாக ப்ரொடியூசர் டைரக்டர், டிஓபி, அண்ட் மியூசிக் அமைஞ்சிருக்கு.. அடுத்து ஹீரோ டீஜய்,, அவர் செட்டில் பார்த்தீங்கன்னா நல்ல கலகலப்பாக இருந்தாலும் ஷாட் னு சொல்லும்போது அந்த கேரக்டராவே மாறிடுவாரு அந்த அளவுக்கு டெடிகேட்டிவ் அடுத்து ஜனனி, ஜனனி என் பொன்னாகவே மாறிட்டாங்க.. உசுரே படத்துக்கும் எனக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் அவர்கள் பேசியது : உசுரே படத்துக்காக நிறைய வேலை பாத்துருக்கோம் நீங்க தான் சப்போர்ட் பண்ணனும் டீஜே பிரதர் இசையமைப்பாளர் சிங்கர் இருந்தும் இப்படத்தில் எனக்கு சப்போர்ட்டாக இருந்ததற்கு மிகவும் நன்றி. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகும் உசுரே படத்திற்கு பத்திரிக்கையாளரான நீங்கள் எங்களுக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்… . இந்த உசுரே படத்தில் பாடிய சித்ரா அம்மா, சின்மயி அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
கதாநாயகி ஜனனி அவர்கள் பேசியது : ஹீரோயின் அவர்கள் எங்க தொடங்குறதுனு தெரியல எல்லாருக்கும் வணக்கம்… டைரக்டர் சார் என்ன கதையை சொன்னாரோ அந்த அளவிற்கு அழகா படமா எடுத்து இருக்காரு ரொம்ப நல்லா வந்திருக்கு உசுரே படம்… ஆகஸ்ட் 1 தியேட்டர்ல ரிலீஸ் ஆகிறது… உசுரே படக் குழுவினருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த படத்தை பார்த்து எங்களுக்காக சப்போர்ட் பண்ணுங்க நன்றி வணக்கம்.
டீஜே அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம்.. அசுரனுக்குப் பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.. ஆரம்பித்த நாட்களை நினைத்து பார்க்கையில் ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு என்னை இந்த அளவுக்கு அழைத்து வந்தது இசை தான். சிறு வயது முதல் இருந்தே அவ்வளவாக யாரிடமும் பேசியது இல்லை இசையிடம் மட்டுமே பேசி வந்தேன். என் உணர்வுகளை பாடல் வரிகள் மூலம் பாடி தயாரித்தும் வந்தேன் எனது 16 வயதினில். முட்டு முட்டு பாடல் மூலமாக உலகத்திற்கு அறிமுகமானேன். எந்த சினிமா பேக்ரவுண்டும் இல்லாத ஒரு ஈழத் தமிழ் குடும்பத்திலிருந்து வந்த நான் டிஜே அருணாச்சலம். என்னை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த என் குரு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு என் முதல் வணக்கமும் நன்றியும். ஒரு வேல் முருகனா இந்த உலகத்துக்கு ஒரு நடிகனா என்னை அறிமுகப்படுத்தியதற்கு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. அசுரன் என்ற ஒரு படத்தினால் எனக்கு நிறைய சந்தோஷமும், என் வாழ்க்கையும் மாறியது.. அந்த ஒரு படத்தை பார்த்துவிட்டு வந்து என்னிடம் கதை சொன்ன அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. என்மேல் நம்பிக்கை வைத்த அந்த இயக்குனரில் ஒருவரான நவீனுக்கு நன்றி. சித்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். அசுரன் படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு எதிர் மறை ஆன ரோல் இந்த படத்துல எனக்கு. நான் சிம்புவின் ரசிகன். இப்படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு சிம்பு நடித்த கோவில் படம் தான் நினைவிற்கு வந்தது. சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் இப்படத்தில் நடித்தேன். அருமையான கதையை கொடுத்த நவீனுக்கு நன்றி அடுத்தடுத்து நீங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிக படங்களை இயக்க வேண்டும்.
22 நாட்களில் முடித்த படம் அழகாக வந்திருக்கு. ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் மவுலி அவர்களுக்கு நன்றி.
இறுதியாக, இயக்குநர் நவீன் மற்றும் தயாரிப்பாளர் மௌலி எம் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவிக்க நிகழ்ச்சி இனிதே முடிந்தது..